ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்புச் செய்திகள்!(Updated) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 29, 2020

ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்புச் செய்திகள்!(Updated)

நாமக்கல் அருகே இயங்கிவரும் தனியார் பள்ளிக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை.

M . sc Botany - English Medium .
M . sc Chemistry - Tamil Medium .
M . Sc Physics - Tamil Medium .
M . sc Zoology - Tamil Medium .

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை schoolnamakkal @ gmail . com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் .

கொங்குநாடு மெட்ரிக் பள்ளி
நாமக்கல்.

மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 8489936671 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் .
******************************************


     




3 comments:

  1. Pg trb economics studymaterial low cost.9600640918

    ReplyDelete
  2. TRB-POLYTECHNIC MATHS, ENGLISH, FOR ADMISSION CONTACT
    ARUN ACADEMY ERODE. CELL -9944500245 (Material available)

    ReplyDelete
  3. *TRB தேர்வு முறைகேடுகள் மறைக்கப்படுகிறதா?*
    |Mar 03, 2020|

    சமீபத்தில் TNPSC குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது. உடனே TNPSC ஆணையம், தவறு செய்த 99 பேரை வாழ்நாள் தடை செய்துவிட்டு அத்தேர்வை தொடர்ந்து நடத்துகிறது. இது சம்மந்தமாக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் "நேர்மையாகத் தேர்வு எழுதியவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவே தேர்வு ரத்துசெய்யப்படவில்லை" என்று விளக்கம் கொடுத்தார்.

    இதேபோல, 2017-இல் TRB நடத்திய அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் 196 தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. உடனே தேர்வு ரத்து செய்யப்பட்டது. நேர்மையாக தேர்வெழுதி வெற்றி பெற்றவர்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால், முறைகேட்டில் ஈடுபட்ட 196-பேரை TRB வாரியம் இதுவரை தடை செய்ய வில்லை. யார் அந்த 196 பேர் என்று கூட இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. தற்போது 2019-இல் TRB-ன் புது அறிவிப்பாணை மூலம் மறுதேர்வு நடக்கும் நிலையில், அந்த 196 தேர்வர்களும் மீண்டும் விண்ணப்பம் செய்துள்ளனரா என்பதும் புதிராக உள்ளது. TNPSC-க்கு ஒரு நியாயம் TRB-க்கு ஒரு நியாயமா, என்று இளைஞர்கள் அதிர்ச்சி அடைத்துள்ளனர்.

    2017-ஆம் ஆண்டின் TRB தேர்வு ரத்து செய்தபோது மறுதேர்வுக்கு எந்த விண்ணப்ப கட்டணமும் வசூல் செய்யமாட்டோம் என்று அரசு சார்பில் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இன்று மறுதேர்வுக்கு லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்களிடம் தேர்வு கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.

    மறுதேர்வு நடக்கும் முன்னரே பல முரண்பாடுகள் நிறைந்து உள்ளதால், 2019-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட TRB மறுதேர்வை நிறுத்திவைக்க (stay) வேண்டும் என, சமூக சேவகர் திரு.K.M.கார்த்திக் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த பொது நல மனு (Diary no.5193/2020), நீதிபதி. திரு.நாகேஸ்வ்ர் ராவ் அடங்கிய அமர்வு முன் நேற்று (02/03/2020) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மெட்ராஸ் உயர் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கை நடத்தலாம் என உரிமை வழங்கி, வழக்கை முடித்து வைத்தனர்.

    கடந்த 2019-இல் உச்சநீதிமன்றத்தின் இதே அமர்வின் உத்தரவின் பேரிலேயே TRB வாரியம் புது (2019) அறிவிக்கையை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைப்படி மதுரை அல்லது சென்னை அமர்வின் முன் இந்த வழக்கு விரைவில் எதிர்பார்க்க படுகிறது.

    இது சம்மந்தமாக மனுதாரரும் சமூக சேவகருமான திரு.K.M.கார்த்திக் கூறியதாவது: விண்ணப்பித்த அனைவரும் ஏமாறும் வகையில் TRB வாரியம் நடந்து கொண்டுள்ளது. TRB வாரியம் தனது இரண்டு அறிவிக்கைகளின் கீழ் விண்ணப்பம் செய்த அணைத்து தேர்வர்களையும் இன்று திருப்தி படுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆகவே 2017-ல் நேர்மையான தேர்வெழுதியவருக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்க வேண்டும். 2019-ன் அறிவிப்பாணையில் நிலுவையில் உள்ள சுமார் 400/500 காலி இடங்களை இணைத்து, புதிதாக சேர்க்கப்படும் அந்த காலியிடங்களுக்கு தேர்வை தொடர்ந்து நடத்த வேண்டும். இந்த வகையில் இரு தரப்பை சேர்ந்த தேர்வர்களும் பலன் அடைவார்கள். மாணவருக்கும் தகுதியான ஆசிரியர் கிடைப்பார்கள். அரசுக்கும் செல்வு மிச்சம், என்றார்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி