அலுவலக ஊழியர்களுக்கு ஆசிரியர் வேலை!! விதிகளில் திருத்தம்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2020

அலுவலக ஊழியர்களுக்கு ஆசிரியர் வேலை!! விதிகளில் திருத்தம்!!


பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களுக்கு, பதவி உயர்வில் ஆசிரியர் வேலை வழங்கப்படும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

*💲📍💲பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான கல்வித் தகுதி, நியமன விதிகள் குறித்த திருத்த சட்டம், அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி, ஒவ்வொரு ஆண்டும், அரசு பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான, மொத்த காலியிடங்களில், 2 சதவீதத்தை, கல்வித் துறையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களான, அமைச்சு பணியாளர்களுக்கு, பதவி உயர்வு வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.


*💲📍💲அதேபோல, தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இதுவரை, பிளஸ் 2 முடித்து, தொடக்க கல்வி டிப்ளமா படித்திருந்தால், அவர்கள் இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால், இனி வரும் காலங்களில், தொடக்க கல்வி டிப்ளமா படிப்புடன், ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

3 comments:

  1. என்ன கொடுமை சார் இது. trb,tet,Tnpsc வேலை யாருக்கும் கிடையாது .

    ReplyDelete
  2. என்ன கொடுமை சார் இது. trb,tet,Tnpsc வேலை யாருக்கும் கிடையாது .

    ReplyDelete
  3. ஏன் கிடையாது முறையாக படித்து தேர்ச்சி பெற்றவர்கள் தான் இப்போதுள்ள அரசு பணியாளர்களும். Bed படித்த யாரும் TNPSC TET எழுதுவதில்லையா, தேர்ச்சி பெறுவதில்லையா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி