பொதுத்தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான சரிபார்ப்பு பட்டியல் (Checklist) வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2020

பொதுத்தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான சரிபார்ப்பு பட்டியல் (Checklist) வெளியீடு


1.அனைத்து பள்ளிகளின் அறிவிப்பு பலகைகளிலும் , சம்பந்தப்பட்ட வகுப்பறைகளிலும் , வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களிலும் | தேர்வுக்கால அட்டவணைகள் ஒட்டப்பட வேண்டும் .

2. அனைத்துத் தேர்வு மையங்களுக்கும் முதன்மை விடைத்தாள் கூடுதல் விடைத்தாள் / வரைகட்டத்தாள் வழங்கப்பட்டுள்ளது , பிற்சேர்க்கை 7 - ன் படி தைத்திருக்க வேண்டும் .

3. அனைத்துத் தேர்வு மையங்களுக்கும் முகப்புத்தாள் கட்டுகள் வழங்கப்பட்டுள்ளது . முதன்மை விடைத்தாள்களுடன் முகப்புத்தாட்கள் தைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யப்பட வேண்டும் .

4.  தேர்வு மையங்களுக்கு காவலர் பாதுகாப்பிற்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் கடிதம் அளிக்கப்பட்டு , காவலர் வருவதை உறுதி செய்து கொள்ள வேண்டும் .

5.  வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கு ஆயுதம் தாங்கிய  காவல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதையும் மற்றும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் கண்காணிப்பு கேமரா  பொருத்தப்பட்டுள்ளதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும் .

6. செய்முறைத் தேர்வு நடத்தி முடித்து மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட வேண்டும் . ( பிப்ரவரி இறுதி வாரம் முதல் )

7. மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் அனைவரது அகமதிப்பீட்டு மதிப்பெண்களும் பதிவேற்றம் செய்யப்பட்டதை உறுதி செய்து கொள்ள வேண்டும் .

8. 10 ஆம் வகுப்பு மொழிப்பாடம் ( Language ) மற்றும் ஆங்கிலப் | ( English ) பாடங்களில் ஒரே தாளாக தேர்வுகள் நடத்தப்படும் ( 100 | மதிப்பெண்கள் ) என்பதை மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

9. மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நேரம் 2 1 / 2 மணி நேரத்திலிருந்து 3 மணி | நேரமாக அதிகரிக்கப்படுகிறது என்பதை மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

10. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கான தேர்வு நேரம் 2 12 மணி ) | நேரத்திலிருந்து 3 மணி நேரமாக அதிகரிக்கப்படுகிறது என்பதை மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

11. + 2 - Old syllabus writing for 70 / 90 and conversion . Bits , Copying , Misbehaving , Writing anything on the Question Paper , Writing names , Register Nos . on the answer book should be avoided .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி