பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து வல்லுநர் குழு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதா ? CM CELL Reply - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2020

பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து வல்லுநர் குழு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதா ? CM CELL Reply


மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் இணையதளம் வழியாக திரு P பிரெடெரிக் எங்கெல்ஸ் அவர்களிடமிருந்து பெறப்பட்ட மனு  நடவடிக்கை மேற்கொள்ளுதல்  தொடர்பாக,

பார்வை : முதலமைச்சர் தனிப்பிரிவு மனு எண், 1060156, நாள் 09.01.2020 மற்றும் 1063725 நாள் 26.01.2020.

பார்வையில் காணும் தங்களின் மனுவின் மீது கவனம் ஈர்க்கப்படுகிறது,
2. தங்களின் தனிப்பிரிவு மனு எண் 1050156 மற்றும் 1063725-ன்
- தொடர்பாக கீழ்வரும் விவரங்கள் தங்களுக்கு தெரிவிக்கப்படுகின்றன.

01.04.2003 அன்றோ அதன் பின்னரோ முறையான அரசு பணியில் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு
ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகளை அளிக்கும் வகையில்
26.02.2016 நாளிட்ட அரசாணை மூலம் அமைக்கப்பட்ட "வல்லுநர் குழு'
27.11.2018 அன்று தனது அறிக்கையினை அரசிடம் அளித்துள்ளது

அதன் பரிந்துரைகள் அரசு பரிசீலனையில் உள்ளது. இதன் மீது இறுதி முடிவு எடுக்கப்பட்ட பின்னரே உரிய அரசாணைகள் வெளியிடப்படும்.


1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி