DSE - மாணவர்களுக்கான கணித உபகரணப் பெட்டி தேவைப்பட்டியல் அனுப்ப பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 16, 2020

DSE - மாணவர்களுக்கான கணித உபகரணப் பெட்டி தேவைப்பட்டியல் அனுப்ப பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.


தமிழகப் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2020 - 21 ஆம் கல்வி ஆண்டில் மற்றும் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கணித உபகரணப் பெட்டிகள் ( Geometry Box ) கொள்முதல் செய்து வழங்கிட ஏதுவாக தேவைப்பட்டியல் அனுப்பிவைத்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இத்திட்டத்திற்கான தேவைப்பட்டியல் மாணவர்களின் சரியான எண்ணிக்கையுடன் கல்வி மாவட்டம் வாரியாக , முதன்மைக் கல்வி அலுவலர் பெற்று தொகுத்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவங்களில் பூர்த்தி செய்து 19.02.2020 - க்குள் மின்னஞ்சல் ( email ) மூலம் ( Excel Sheet ) pdisec . tndse @ nicin என்கிற பிடி - 1 பிரிவு மெயில் ID - க்கு அனுப்பிவிட்டு , அதன் நகலினை முதன்மைக் கல்வி அலுவலரின் கையெப்பத்துடன் மாவட்டக் கல்வி அலுவலர்களின் படிவத்துடன் சேர்த்து தபால் மூலம் அனுப்பிவைத்திடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தலாகிறது .

மேலும் தேவைப்பட்டியல் கல்வி மாவட்டவாரியாகவும் / பள்ளிகள் வாரியாகவும் , இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் தயார் செய்து உரிய காலக்கெடுவிற்குள் தவறாது அனுப்பப்பட வேண்டும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் கேட்டுக் கெள்ளப்படுகிறார்கள் .

மேலும் மாணவர்களின் எண்ணிக்கை EMIS மற்றும் இதர திட்டங்களுக்கு அமைந்துள்ளவாறு சரியாக உள்ளதா என்பததையும் சரிபார்த்து உறுதி செய்து அளிக்குமாறும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கெள்ளப்படுகிறார்கள்.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி