Flash News : TNPSC - தேர்வுகளில் 6 அதிரடி சீர்திருத்தங்களை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது தேர்வாணையம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2020

Flash News : TNPSC - தேர்வுகளில் 6 அதிரடி சீர்திருத்தங்களை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது தேர்வாணையம்!

தேர்வாணையம் தனது தேர்வு முறைகளில் இன்றியமையாத மாற்றங்களை அவ்வப்போது அறிவித்து செயல்படுத்தி வருகிறது . கடந்த 07 . 02 , 2020ல் அன்று ஆதார் கட்டாயம் உள்ளிட்ட ஆறு முக்கியமான புதிய மாற்றங்களை முதற்கட்டமாக அறிவித்திருந்தது அதன் தொடர்ச்சியாக 14 . 02 2020 அன்றும் தேர்வு முறைகளில் செய்யப்படவுள்ள சீர்திருத்தங்கள் குறித்து தேர்வாணையத் தலைவர் தலைமையில் தேர்வாணையக் குழுமம் கூடி விவாதித்து பல முடிவுகள் எடுக்கப்பட்டன . அம்முடிவுகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :

1 . முதனிலை மற்றும் முதன்மை தேர்வு முறை அறிமுகம் : 

தொகுதி - 4 தொகுதி - 2A போன்ற தேர்வுகளுக்கு பொது அறிவுத்தாள் மட்டுமே கொண்ட ஒரே ஒரு தேர்வு மட்டும் இதுவரை நடந்துவருகிறது . இனி வருங்காலங்களில் இத்தேர்வுகள் இருநிலைகளைக் கொண்டதாக அதாவது , முதனிலை மற்றும் முதன்மைத் தேர்வுகளாக நடத்தப்படும்

2 . தேர்வு நேரங்களில் மாற்றம் :

தேர்வு எழுத வரும் தேர்வர்களின் மெய்த்தன்மை உறுதி செய்யவும் , இதர தேர்வு விதிமுறைகளைத் தேர்வர்களுக்கு விளக்கும் விதமாகவும் , தேர்வர்கள் இனி , 9 . 00 மணிக்கே தேர்வுக் கூடங்களுக்கு வருகை புரிதல் வேண்டும் தேர்வு நேரம் சரியாக 10 . 00 மணிமுதல் 01 . 00 மணிவரை மூன்று மணி நேரத்திற்கு நடைபெறும் 10 . 00 மணிக்கு மேல் வரும் எந்த தேர்வர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் . தேர்வு நேரத்திற்குப் பின்னர் விடைத்தாளில் பதிவு செய்ய வேண்டிய கூடுதல் விவரங்களுக்காக 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும் . காலை மாலை இரு வேளைகளிலும் தேர்வு இருந்தால் மாலை நடக்க வேண்டிய தேர்வு பிற்பகல் 3 . 00 மணிக்குத் தொடங்கும் .

3 . அனைத்து வினாக்களுக்கும் விடைகள் அளிப்பது கட்டாயம் :

இனி வரும் கொள்குறிவகைத் தேர்வுகளில் அனைத்து கேள்விகளுக்கும் தேர்வர்கள் விடையளிக்க வேண்டும் எந்தவொரு வினாவிற்கும் விடை அளிக்க இயலவில்லை ! விடை தெரியவில்லை எனில் அதற்கு கூடுதலாக கொடுக்கப்படும் E என்ற வட்டத்தினை கருமையாக்குவதுடன் மொத்தம் எத்தனை கேள்விகளுக்கு முறையே A , B , C , D மற்றும் E விடைகளை நிரப்பியுள்ளார் என்ற விவரங்களை தனியே பதிவு செய்து அதற்கான உரிய கட்டங்களை நிரப்ப வேண்டும் . தேர்விற்குப் பின்னர் விடைத்தாளில் பதிவு செய்ய வேண்டிய கூடுதல் விவரங்களுக்காக தேர்வு நேரத்திற்குப் பிறகு 15 நிமிடங்கள் இப்பணிக்காக மட்டும் வழங்கப்படும் . எந்தவொரு கேள்விக்கும் மேற்கூறிய A , B , C , D மற்றும் E ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை குறிக்கத் தவறினால் விடைத்தாள் செல்லாததாக்கப்படும் தேர்வு முடிந்ததும் எந்தவொரு குறிப்பிட்ட நபரின் விடைத்தாளையும் இனங்கான இயலாதவாறு தேர்வர்களின் விவரங்கள் அடங்கிய பகுதி மற்றும் விடையளிக்கும் பகுதி ஆகியவற்றை தேர்வர்களின் முன்னிலையிலேயே தனித் தனியே பிரித்து தேர்வு அறையிலேயே சீலிடப்படும் சீலிடப்பட்ட உறை மீது அறையிலிருக்கும் சில தேர்வர்களிடம் கையொப்பம் பெறப்படும் .

4 . தேர்வரின் கைரேகைப் பதிவு .

தேர்வர்களுடைய விடைத்தாளை அடையாளம் காண இயலாத வகையில் விடைத்தாளின் விடையளிக்கும் பகுதியில் தேர்வரின் கையொப்பத்திற்கு பதிலாக தேர்வரின் இடது கை பெருவிரல் ரேகை பதிவு செய்யப்படும் .

5 . விடைத்தாள் பாதுகாப்பு : 

தேர்வுமையங்களிலிருந்து விடைத்தாள்களை பாதுகாப்பான முறையில் தேர்வாணைய அலுவலகத்திற்கு எடுத்துவர தற்போதுள்ள முறை முற்றிலும் மாற்றப்பட்டு அதிநவீன தொழில்நுட்ப ஜி . பி . எஸ் மற்றும் கண்காணிப்புக் கேமரா வசதியுடன் கூடிய பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்படும் . இந்நடவடிக்கைகள் முழுவதையும் நேரலையாக தேர்வாணைய அலுவலகத்தில் 24 மணி நேரமும் கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை தொடங்கப்படும்

6 . தகவல்கள் மற்றும் கருத்துக்களைத் தெரிவிக்க வசதி : 

தேர்வாணையத்திற்கும் , நேர்மையான முறையில் தேர்வுக்குத் தங்களை தயார் படுத்திக்கொண்டிருக்கும் தேர்வர்களுக்கும் இடையிலான பிணைப்பை உறுதி செய்யவும் , தகவல் பரிமாற்றத்தினை மேலும் எளிமைப்படுத்தவும் தேர்வாணைய இணைய தளத்தில் ஒரு சிறப்பு தகவல் தளம் விரைவில் உருவாக்கப்படும் தேர்வாணையம் அவ்வப்போது கொண்டுவரும் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் குறித்த பின்னூட்டங்களைப் பெறவும் தேர்வர்கள் தங்களுக்குத் தெரியவரும் தகவல்களை தேர்வாணையத்துடன் பகிர்ந்துகொள்ளவும் இத்தளம் பயனுள்ளதாக இருக்கும் . அவ்வாறு தகவல் அளிக்கும் தேர்வர்களின் இரகசியத்தன்மை காக்கப்படும் .


9 comments:

  1. Pg trb econimics studymaterial and guidance 7598714479

    ReplyDelete
    Replies
    1. Sampalam pathhalaiyo ,materials virkka thayariyitingale, atleast UNGA vertu pakkathula any poor who prepare for exam give it to him,or her,

      Delete
  2. 3rd point is best to prevent malpractice and forgery.. wait and see to what happened to this method

    ReplyDelete
  3. TRB POLYTECHNIC MATHS, ENGLISH, EEE, EC, MECH FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE CONTACT 9944500245

    ReplyDelete
    Replies
    1. Job confirm illaina money return pannidivingalo? Koovi koovi virkuringalae centre kku Vara ellariyuma velaila Serra mathiri muyarchi seivirkalo, frnds better stay in home use mobile for your study,don't believe this advertisement,

      Delete
  4. பாதுகாப்பான ஊழல்

    ReplyDelete
  5. Adei options ABCDE ellam epdi da count panni potutu irukurathu, ithuku ethuju omr sheet, loosu pasangala

    ReplyDelete
  6. குற்றம் செய்தவன பிடிக்க சொன்னா, இனிமே எவனுமே பாஸ் பண்ண முடியாத மாறி பண்ணி வச்சிருக்காங்க. பத்து ல நாலு பேரு காசு கொடுத்து போனாலும், படிச்ச ஆறு பேருக்கு கிடைத்தது, இப்போ ஒருத்தனும் உள்ள போக முடியாத விதிகளை மாத்திட்டாங்க. வாழ்த்துக்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி