IFHRMS செயல்படுத்துதல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2020

IFHRMS செயல்படுத்துதல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!


அரசின் திட்டமான ஒருங்கிணைந்த நிதி ( ம ) மனிதவள மேம்பாடு அமைப்பு முறை , 2020 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் கருர் மாவட்டத்தில் தனிய அமைப்பு முறையாகச் செயல்படத் தொடங்கியுள்ளது .

இத்திட்டம் தொடர்பான பயிற்சி திருநெல்வேலி மாவட்டம் முழுவதும்
 28 . 05 . 2018 முதல் அனைத்து பணம் பெறும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு , அவர்களின் சந்தேகங்களுக்கும் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது . மேலும் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களால் சட்டசபையில் அறிவிக்கப்பட்டு , ஆணையர் , கருவூலக்கனக்குத்துறை , சென்னை அவர்களின் அறிவுரையின்படி , இத்திட்டம் 01 . 03 . 2020 முதல் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட அறிவிக்கப்பட்டுள்ளது .

25 . 02 . 2020 முதல் ATBPS என்கிற பழைய முறையில் பட்டியல் வில்லை ( டோக்கன் வழங்குவது நிறுத்தப்படும் என்கிற விபரம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பணம் பெறும் அலுவலர்களுக்கும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது .

மேலும் 01 . 03 . 2020 முதல் IFHRMS முறையில் அனைத்துப் பணம் பெறும் அலுவலர்களும் தங்கள் பட்டியல்களைத் தயார் செய்து , சம்பந்தப்பட்ட கருவூலத்திற்கு அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மாவட்ட ஆட்சியர், திருநெல்வேலி.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி