NCERT - பாடப்புத்தகத்தை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் தஞ்சை பல்கலைக்கழகத்துக்கு, தகவல் ஆணையம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 16, 2020

NCERT - பாடப்புத்தகத்தை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் தஞ்சை பல்கலைக்கழகத்துக்கு, தகவல் ஆணையம் உத்தரவு.


மத்திய அரசு போட்டித்தேர்வுகளில் தமிழக மாணவர்களும் வெற்றி பெறும் வகையில், என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து வழங்குமாறு தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள், ரெயில்வே தேர்வுகள், வங்கி, தபால் துறை போன்ற தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் நடத்தப்படுகின்றன.

இந்த தேர்வுக்கான கேள்விகள் பெரும்பாலும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) பாடத்திட்டங்களில் இருந்தே கேட்கப்படுகின்றன.எனவே தமிழக மாணவர்கள் பயன்பெறும் வகையில் என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகங்களை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்று ஆவடியை சேர்ந்த ஆர்.சந்தர் என்பவர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர்மாதம் மனு அனுப்பினார்.

அதற்கு பல்கலைக்கழகத்திடம் இருந்து பதில் வரவில்லை. இதையடுத்து அந்த பல்கலைக்கழகத்தின் பதிவாளரிடம் மேல்முறையீடு செய்தார். அவரும் பதில் அளிக்காததால், தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் புகார் செய்தார்.இதை மாநில தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் விசாரித்தார்.இதில் தஞ்சை மாவட்ட கலெக்டர், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

விசாரணைக்குப்பின் தகவல் ஆணையர் முத்துராஜ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் மொழி பெயர்ப்பு துறையின் பணிகளில் புத்தகங்களையும் மொழி பெயர்க்க வகை செய்யப்பட்டுள்ளது.

தமிழக மாணவர்கள் தங்களின் பள்ளிப்படிப்பை பெரும்பாலும் தமிழில் படிப்பதால் அவர்களால் மேல்படிப்புகளுக்கு செல்வதிலும், மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவதும்கடினமாக உள்ளது.

குறிப்பாக நீட், யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி. ஆகிய தேர்வுகள் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டங்களின் அடிப்படையிலேயே தயாரிக்கப்படுவதால் அந்த பாடத்திட்டத்தில் படித்தவர்கள் தேர்ச்சி பெற்றுவிடுகிறார்கள்.ஆனால், தமிழ் வழியில் படித்த மாணவர்களால் மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற முடியவில்லை.

எனவே, தமிழ் வழியில் படித்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தில் உள்ள 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான இயற்பியல், வேதியியல், வரலாறு, புவியியல், பொருளாதாரம், கணிதம் ஆகிய புத்தககங்களை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளிலிருந்து தமிழில் மொழி பெயர்க்க வேண்டும்.இந்த மொழிபெயர்ப்புகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 comment:

  1. University la vettiya sambalam vangura professors kandipa itha seiyyalam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி