ஐந்து ஆண்டுகள் வரை நடந்த தேர்வு முடிவுகளை ஆய்வு செய்ய TNPSC முடிவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 4, 2020

ஐந்து ஆண்டுகள் வரை நடந்த தேர்வு முடிவுகளை ஆய்வு செய்ய TNPSC முடிவு!


தேர்வு முறைகேடு விவகாரத்தால், ஐந்து ஆண்டுகள் வரை நடந்த தேர்வுகளின் முடிவுகளை ஆய்வு செய்ய, டி.என்.பி.எஸ்.சி., திட்டமிட்டுள்ளது. 

இதற்கான பணிகள் துவங்கிஉள்ளன. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில், பல்வேறு முறைகேடுகள் நடந்து, அரசு வேலையில் நுாற்றுக்கணக்கானோர் சேர்ந்துள்ளனர். அம்பலம்'குரூப் - 4, குரூப்- 2 ஏ, குரூப்- 2, குரூப் - 1' மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் போன்ற தேர்வுகளில், தேர்வு முறைகேடு, விதிமீறல் என, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.குரூப் - 4 முறைகேடுகள், ஊடகங்கள் மற்றும் சில பயிற்சி மைய நிர்வாகிகளின் முயற்சியால், அம்பலமாகி உள்ளன. இந்த வழக்குகள் குறித்து, சி.பி.சி.ஐ.டி., நடத்திய விசாரணையில் சங்கிலி தொடர் போல, இடைத்தரகர்களும், அரசு ஊழியர்களும், தேர்வர்களும் சிக்கி வருகின்றனர்.

கடந்த, 2019ல் நடந்த, குரூப் - 4 தேர்வில் முறைகேடுகளின் மூளையாக செயல்பட்ட, இடைத்தரகர் ஜெயக்குமார் என்பவரை தேடப்படும் குற்றவாளியாக, சி.பி.சி.ஐ.டி., அறிவித்துள்ளது. பல தேர்வர்களும், அரசு ஊழியர்களும், தலைமை செயலக ஊழியரும் போலீசால் கைது செய்யப் பட்டு உள்ளனர்.
சிக்கியவர்களில் சில இடைத்தரகர்களும், அரசு ஊழியர்களும், 2018ல் நடந்த குரூப் - 2 தேர்விலும், 2017ல் நடந்த குரூப் - 2 ஏ தேர்விலும், முறைகேடுகளில் ஈடுபட்டது அம்பலமாகிஉள்ளது.

இதுகுறித்தும், போலீசார் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.
இன்னும் சிக்குவர் தற்போது, பூகம்பமாக வெடித்திருக்கும் இந்த விவகாரத்தில், அடுக்கடுக்கான மோசடிகள் அம்பலமாவதால், ஐந்து ஆண்டுகளாக நடந்த தேர்வுகள் மற்றும் அதன் முடிவுகளை ஆய்வு செய்து விசாரிக்க, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது.
இதற்காக, டி.என்.பி.எஸ்.சி.,யில் தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு, விசாரணை துவங்கியுள்ளது. குரூப் - 4 முறைகேடில் சிக்கியுள்ள போலீசார், அரசு ஊழியர்கள், டி.என்.பி.எஸ்.சி., ஊழியர்கள் ஆகியோர், பணியில் சேர்ந்த காலம் முதல், தேர்வு முடிவுகளை ஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, ஐந்து ஆண்டுகளுக்கான, 'ரேங்க்' பட்டியல் மற்றும் விடைத்தாள் திருத்தம் ஆகியவற்றை ஆய்வு செய்யும் பணிகள் துவங்கியுள்ளன. இதனால், இன்னும் பல தேர்வர்கள் சிக்குவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

16 comments:

  1. No,, 2011 லிருந்து விசாரணை நடத்த வேண்டும்.. 2010,, 2011,, 2013 நடந்த குரூப் 2 exam மிக பெரிய ஊழல் நடந்துள்ளது..

    ReplyDelete
  2. PG TRB 2017 OMR ah rescan pannunga na... TRB pannave maatreengale..

    ReplyDelete
  3. Trb exams a check panna nalla irukku.

    ReplyDelete
  4. TET 2012 laye corruption dhaan bro. TET 2012 to 2017 varaikum analysis pannanum both PG TRB um

    ReplyDelete
  5. Pls check TRB also

    ReplyDelete
  6. எல்லாமே பணத்த வாங்கிட்டு தான் நடக்குது இதுல பில்டப் வேர

    ReplyDelete
  7. மொத்தத்தில் gp4 தேர்வு ரத்து செய்ய வேண்டும்.... இது என் சுயநலத்திற்காக கூறவில்லை... இதேபோல் தான் polytechnic தேர்வும் ஊழல் காரணமாக ரத்தானது...

    ReplyDelete
    Replies
    1. உண்மையாக படித்து வெற்றி பெற்றவர்களின் நிலையை பற்றி யோசித்துப் பார்த்தீர்களா?இப்படிப்பட்டவர் நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்?

      Delete
    2. Correct SGK🙏🙏👏👏. படித்துத் pass பண்ணவங்கள்லாம் பாவம் மா?

      Delete
  8. ஊழல் செய்தவர்கள் இன்னும் எத்தனை பேரோ... அதனால் gp4 தேர்வை ரத்து செய்வது சரியே. ....

    ReplyDelete
  9. அப்படியே pgtrb யும் 2017 omr ரிலீஸ் pannugga

    ReplyDelete
  10. அனைவரையும் உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி