முறைகேடுகளை தடுக்க தேர்வு நடைமுறைகளில் மாற்றங்கள் - TNPSC அறிவிப்பு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 7, 2020

முறைகேடுகளை தடுக்க தேர்வு நடைமுறைகளில் மாற்றங்கள் - TNPSC அறிவிப்பு!!


புதிய மாற்றங்கள் : இந்நிலையில் வெளிப்படைத்தன்மையை மேலும் அதிகரிக்கும் வண்ணமாக பல்வேறு முடிவுகளைத் தேர்வாணையம் எடுத்துள்ளது மேலும் பல ஆக்கபூர்வமான சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க
ஆவன செய்து வருகிறது .

முதற்கட்டமாக தேர்வாணையம் கீழ்கண்ட ஆறு முடிவுகளை உடனடியாக செயல்படுத்தவுள்ளது

1 . தேர்வு நடைமுறைகள் முழுவதும் நிறைவடைந்தவுடன் , இறுதியாகத் தேர்வுபெற்ற நபர்கள் தொடர்பான அனைத்துத் விவரங்களும் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்படும் இதன் தொடக்கமாக 2019ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி | தேர்வின் நடைமுறைகள் முற்றிலுமாக நிறைவடைந்த நிலையில் தேர்ச்சியடைந்த 181 தேர்வர்களின் விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

2 . தேர்வு நடவடிக்கைகள் முழுவதும் நிறைவடைந்த பின் தேர்வர்களின் விடைத்தாள் நகல்களை ( OMR மற்றும் எழுத்துத் தேர்வு விடைத்தாள்கள் )
இணையதளம் மூலமாக உரிய கட்டணம் செலுத்தி உடனடியாக பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படும் . இம்முறை ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

3 . பல்வேறு பதவிகள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன . இவ்வாறு கலந்தாய்வு நடைபெறும் நாட்களில் அந்தந்த நாளின் இறுதியில் துறைவாரியாக , மாவட்ட வாரியாக , இடஒதுக்கீடு வாரியாக நிரப்பப்பட்ட இடங்கள் மற்றும் காலியிடங்களின் விவரம் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்படும்.

இம்முறையும் ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் . இனிவருங்காலங்களில் வெளிப்படைத்தன்மையை மேலும் அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் உறுதியாகத் தொடர்ந்து எடுக்கப்படும்.

4 . தேர்வு மையம் ஒதுக்கீடு : தேர்வாணையம் தேர்வர்களின் நலன் கருதியே அவர்தம் விருப்பப்படி தேர்வு மையத்தினை இணைய வழி விண்ணப்பித்தலின் போது தேர்வு செய்யும் நடைமுறையினை பின்பற்றி வருகிறது இனி தேர்வர்கள் இணைய வழியே விண்ணப்பிக்கும் போது மூன்று மாவட்டங்களைத் தங்களுடைய தேர்வு மைய விருப்பமாக தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவர் . தேர்வு எழுதும் மையங்களை ( வருவாய் வட்டம் - Taluk மற்றும் தேர்வுக் கூடம் ) தேர்வர்களுக்கு அதிக சிரமம் ஏற்படாத வகையில் தேர்வாணையமே ஒதுக்கீடு செய்யும்.

 5 . ஆதார் கட்டாயம் : தேர்வு நடவடிக்கைகளை மேலும் செம்மைப்படுத்தவும் , ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்வதைத் தடுக்கும் வண்ணம் விண்ணப்பிக்கும் போது ஆதார் எண் அளிப்பது கட்டாயமாக்கப்படும் . தேர்வு எழுத வரும் தேர்வர்களின் விரல் ரேகையை ஆதார் தகவலோடு ஒப்பிட்டு மெய்த்தன்மையை சரிபார்த்த பின்னரே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.

6 , தொழில்நுட்பத் தீர்வு : மேலும் , இனிவரும் தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு முன்பாகவே முறைகேடுகள் ஏதேனுமிருப்பின் அதனை முன்கூட்டியே அறிந்து , முழுவதும் தடுக்கும் வண்ணமாக உயர் தொழில் நுட்பத் தீர்வு வரவிருக்கும் தேர்விலிருந்து நடைமுறை படுத்தப்படும் .இதுமட்டுமல்லாமல் தேர்வு நடைமுறை சார்ந்த பிற செயல்பாடுகளிலும் விரைவில் தக்க மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் .

நாள் 07 . 02 . 2020 )

செயலாளர்.

7 comments:

  1. போங்கடா நீங்களும் உங்க தேர்வும் இதுலயும் பிராடு நடக்காதுன்னு என்ன நிச்சயம்?

    ReplyDelete
  2. TNPSC ஊழல்களை திசை திருப்ப இது போன்ற அறிக்கைகளை வெளியிடுகின்றனர்

    ReplyDelete
  3. தேர்வர்களுக்கு மட்டுமே நிபந்தனை ...
    இடைத் தரகர்களுக்கு அல்ல...

    ReplyDelete
  4. can u record all interview processes and upload on youtube????

    ReplyDelete
  5. Eye wash news just wanted to divert the attention of public

    ReplyDelete
  6. எல்லாம் ஏப்ரல் 1 முதல்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி