100 நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்த அரசு நடவடிக்கை! - kalviseithi

Mar 3, 2020

100 நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்த அரசு நடவடிக்கை!


தமிழகத்தில் வரும்கல்வியாண்டில் ( 2020 - 2021 ) 100 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகதரம் உயர்த்த பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது .

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழக சட்டப்பேரவை யில் விரைவில் வெளியாகவுள்ளது . மாணவ , மாணவிகள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே உயர்நிலை , மேல்நிலை கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்து டன் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன . அதன்படி வரும் கல்வியாண் டில் 100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த துறை வாரியான மானியக் கோரிக்கைகளை விவாதிக்க வரும் 9 - ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட உள்ளது .

இதை முன் னிட்டு முன்னதாகவே , பள்ளிக்கல்வித்துறைமானியக்கோரிக்கை நடக்கும் நாளன்று வெளியிடப்படவேண்டிய புதிய அறிவிப்புக ளைத் தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது . இதன் ஒரு பகுதியாக வரும் கல்வியாண்டில் ஊராட்சி ஒன் றிய நடுநிலைப் பள்ளிகளில் இருந்து உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்ததகுதியானவற்றை பரிந்துரை செய்ய வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது .

இதையடுத்து தரம் உயர்த்தப்பட வேண்டிய பள்ளிகளின் பட்டியல் , அவற்றில் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் வசதிகள் ஆகியவை குறித்த அறிக்கையை திங்கள்கிழமை மாலைக்குள் சமர்ப்பிக்கபள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது .

1 comment:

  1. TRB-POLYTECHNIC and PG- TRB MATHS, ENGLISH, FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE. CELL -9944500245
    (Material available)

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி