பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் 10 லட்சம் மாணவர்களின் குழப்பம் தீர்ந்தது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 13, 2020

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் 10 லட்சம் மாணவர்களின் குழப்பம் தீர்ந்தது!


ஹால்டிக்கெட் விவகாரம்:

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் 10 லட்சம் மாணவர்களின் குழப்பம் தீர்ந்தது

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை சுமார் 10 லட்சம் மாணவர்கள்  எழுத உள்ளனர்.

இத்தேர்வு வரும் 27-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

 இந்நிலையில் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை  பள்ளிகளில் டவுன்லோட் செய்யப்பட்டது.

 அப்போது தேதி வாரியாக தேர்வுகள் வெளியிடப்படாமல் பாடம் வாரியாக தேர்வுகள் வெளியிடப்பட்டிருந்தது தெரியவந்தது.

கடைசியில் எழுத வேண்டிய கணிதத் தேர்வின் தேதி நடுவில் இடம்பெற்றிருந்தது.

 இதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் பெரும் குழப்பத்துக்கு உள்ளாகினர்.

 இதுபற்றி  தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் (நிறுவனத் தலைவர் டாக்டர் அ.மாயவன் அவர்கள் எக்ஸ்எம்எல் சி) மாநில சட்ட செயலாளர் சாமி அவர்களுக்கு தெரியவந்தது.

 இதையடுத்து அவர் உடனடியாக கழகத்தின் மாநிலத் தலைவர் எஸ். பக்தவச்சலம் அவர்களிடம் தகவல்   தெரிவித்தார்.

 இதைத்தொடர்ந்து மாநில தலைவர் எஸ்.பகதவச்சலம்  அவர்கள் மரியாதைக்குரிய தேர்வுத்துறை இயக்குனர் அவர்கள் மரியாதைக்குரிய இணை இயக்குனர் ஆகியோரிடம் வியாழக்கிழமை முறையிட்டார்.

 இதை உடனடியாக மாற்றித் தருவதாக  அவர்கள் உறுதி அளித்தனர்.

 அதன்படி  தேதி வாரியாக தேர்வுகள் இன்று வெளியிடப்பட்டு ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

 இதனால் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத இருந்த 10 லட்சம் மாணவர்களின் குழப்பத்தை தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் தீர்த்து வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. இந்த கல்வி ஆண்டில் கல்வித்துறையில் உள்ள குழப்பங்கள் பல+பல=பற்பல தாங்கமுடியாத மன குழப்பம் வாழ்க கல்வி

    ReplyDelete
  2. TRB-POLYTECHNIC & PG-TRB MATHS, ENGLISH, FOR ADMISSION
    CONTACT ARUN ACADEMY ERODE. CELL -9944500245
    (Material available)

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி