26 ஆண்டுகள் மருத்துவ விடுப்பு எடுக்காமல் பணிபுரிந்த தலைமை ஆசிரியருக்கு பாராட்டு - kalviseithi

Mar 5, 2020

26 ஆண்டுகள் மருத்துவ விடுப்பு எடுக்காமல் பணிபுரிந்த தலைமை ஆசிரியருக்கு பாராட்டுஅரசு பள்ளிகளில், 26 ஆண்டுகள் மருத்துவ விடுப்பு எடுக்காமல் பணிபுரிந்து ஓய்வு பெற்று, தற்போது, பணி நீட்டிப்பில் உள்ள தலைமை ஆசிரியருக்கு, பாராட்டு விழா நடந்தது.

திருத்தணி கல்வி மாவட்டத்தில் உள்ள அமிர்தாபுரம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியராக, கடந்தாண்டு ஜூன் மாதம் பணி ஓய்வு பெற்றவர் ஆர்.சம்பத்குமார்.இவர், தற்போது பணி நீட்டிப்பில், அதே பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும், இவர், 1992ம் ஆண்டு முதல், அரசு பணியில் சேர்ந்து, 16 ஆண்டுகள் கணித பட்டதாரி ஆசிரியராகவும், 10 ஆண்டுகள் அமிர்தாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.தமிழக அரசு விடுப்பு விதிகளின்படி ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு விடுப்பு சலுகை வழங்கியுள்ளது.

பரிசு

அதன்படி தலைமை ஆசிரியர், தன் பணிக் காலத்தில், 540 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுக்க அனுமதியுள்ளது.ஆனால், தலைமை ஆசிரியர் சம்பத்குமார், தன் பணிக் காலத்தில் ஒரு நாள் கூட மருத்துவ விடுப்பு எடுக்காமல், 26 ஆண்டுகள், 8 மாதங்கள் அர்ப்பணிப்போடு பணிபுரிந்து முடித்துள்ளார்.இதையடுத்து தலைமை ஆசிரியர் சம்பத்குமாருக்கு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் பாராட்டு விழா நேற்று நடந்தது. இதில், பெற்றோர் சங்க தலைவர், செயலர் மற்றும் உறுப்பினர்கள் உட்பட அமிர்தாபுரம் பகுதி மக்கள், தலைமை ஆசிரியர் சம்பத்குமாரை பாராட்டி, பரிசுகள் வழங்கினர்.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி