திட்டமிட்டபடி, பிளஸ் 2 தேர்வு இன்று நடைபெறுகிறது! - kalviseithi

Mar 20, 2020

திட்டமிட்டபடி, பிளஸ் 2 தேர்வு இன்று நடைபெறுகிறது!


பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு தேர்வுகள் குறித்து, புதிய அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. திட்டமிட்டபடி, பிளஸ் 2 தேர்வு இன்று நடக்கிறது.

தமிழகத்தில் நடந்து வரும் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் தள்ளி வைக்கப்படலாம்' என, தகவல்கள் பரவின. நேற்றிரவு, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பிலும், தேர்வுகள் தள்ளி வைப்பு குறித்து, எந்த தகவலும் இடம் பெறவில்லை. 10ம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் 27ம் தேதி துவங்கும் நிலையில், அதுகுறித்தும், மாற்று அறிவிப்பு வெளியாகவில்லை

பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், புள்ளியியல் மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கின்றன. இந்த தேர்வுடன் தொழிற்கல்வி மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுக்கான தேர்வுகள் முடிகின்றன.மார்ச் 24ம் தேதி, வேதியியல், கணக்கு பதிவியல் மற்றும் புவியியலுக்கான தேர்வுகள் நடக்கின்றன. அத்துடன், கணிதம், அறிவியல் மற்றும் வரலாறு பாடப்பிரிவில் படிக்கும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, அனைத்து தேர்வுகளும் முடிகின்றன.

1 comment:

  1. "நேற்று 12 தேர்வு ஒத்தி வைக்க அரசு முடிவு" என்ற தவறான செய்தி வெளியானதால் குழப்பம். அதிகாரப்பூர்வமான செய்திகளை மட்டும் வெளியிடுமாறு வேண்டுகோள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி