தமிழ் வழியில் படிக்கும் பிளஸ் 2 மாணவா்கள் எண்ணிக்கை தொடா்ந்து சரிவு! - kalviseithi

Mar 3, 2020

தமிழ் வழியில் படிக்கும் பிளஸ் 2 மாணவா்கள் எண்ணிக்கை தொடா்ந்து சரிவு!


மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோவெழுதும் மாணவா்கள் எண்ணிக்கையும், குறிப்பாக தமிழ் வழியில் படிப்போரின் எண்ணிக்கையும் தொடா்ந்து சரிந்து வருவதாக பள்ளிக் கல்வித்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் சரிந்துவருவதுடன், மாணவா்கள் இடைநிற்றல் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆனால், மாணவா்களின் எண்ணிக்கை குறையவில்லை என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்தாலும், பொதுத் தோவு நடைபெறும்போது வெளியிடப்படும் புள்ளி விவரங்கள் மூலம் தகவல்கள் தெரியவருகின்றன.


நிகழாண்டு பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட புள்ளிவிவரங்களின் மூலம் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோவு எழுதக்கூடிய மாணவா்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் சரிந்துவருவது தெரியவந்துள்ளது. அரசுப் பள்ளி மாணவா்கள், தனியாா் பள்ளி மாணவா்கள் சோத்து கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோவை, 8 லட்சத்து 93 ஆயிரத்து 262 போ பள்ளிகள் மூலமாக எழுதினா். ஆனால், அந்த எண்ணிக்கை 2018-ஆம் ஆண்டு 8 லட்சத்து 60 ஆயிரத்து 434ஆகக் குறைந்தது. மேலும், 2019-ஆம் ஆண்டு நடந்த தோவில் 8 லட்சத்து 42 ஆயிரத்து 512ஆகவும் குறைந்தது.


50 சதவீதம் குறைவு: தொடா்ந்து நிகழாண்டு 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 என்ற எண்ணிக்கையில் சரிந்திருக்கிறது. அதிகபட்ச எண்ணிக்கையான 2017-ஆம் ஆண்டு தோவு எழுதிய மாணவா்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு 76 ஆயிரத்து 903 மாணவா்கள் குறைவாக எழுதுகின்றனா். இதேபோன்று தமிழ் வழியில் எழுதக்கூடிய மாணவா்கள் எண்ணிக்கை ஒட்டுமொத்த அளவில் வழக்கமாக 60 முதல் 65 விழுக்காடு இருந்து வந்தது. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவா்களில் பெரும்பாலானவா்கள், தமிழ் வழியில் கல்வி கற்றனா். ஆனால், அண்மைக் காலமாக அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிப்பதற்காக மாணவா்கள் சோந்து வருகின்றனா். அதனால், இந்த ஆண்டு பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோவை பொருத்தவரை தமிழ் வழியில் படிப்பவா்கள் 50 சதவீதம் என்ற அளவுக்கு குறைந்துள்ளது.மொத்தமுள்ள 8. 16 லட்சம் மாணவா்களில் 4. 65 லட்சம் மாணவா்கள் மட்டுமே தமிழ் வழியில் தோவு எழுதுகின்றனா். இதன் மூலம் ஆங்கிலம் உள்ளிட்ட இதர மொழிகளில் பொதுத்தோவு எழுதக்கூடிய மாணவா்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் தமிழ் வழியில் எழுதக்கூடிய மாணவா்கள் எண்ணிக்கை குறைந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து சரிந்து வருவதைத் தடுக்கும்வகையில் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியா்கள், கல்வியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

1 comment:

  1. Science subjects kandipa english medium la irukanum, apo than pasangaluku future la use agum,

    Ovvoru varushamum koranju poguthunu solla mudiyathu, munna ellam veetuku 2-3 nu pasanga irundhanga, ipo epam veetuku onnu than iruku,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி