நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களை மார்ச் 31 ஆம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவு - kalviseithi

Mar 17, 2020

நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களை மார்ச் 31 ஆம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவு


நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள், நீச்சல் குளம், மால்கள் உள்ளிட்ட அனைத்தையும் மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், நீச்சல் குளங்கள், தனியார் பொழுது போக்கு பூங்காக்கள், மால்கள் உள்ளிட்ட அனைத்தையும் மார்ச் 31ம் தேதி வரையும் மூட மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், தனியார் நிறுவனங்கள் அவர்களின் ஊழியர்களை வீடுகளில் இருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும், பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மார்ச் 31 வரை மருத்துவக் கல்லூரி தவிர்த்து அனைத்து பள்ளி கல்லூரிகளையும் மூட உத்தரவு: முதல்வர் பழனிசாமி.

அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை 114 பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூட வேண்டாம்.

கர்நாடகா, கேரளா எல்லை ஓரத்தில் உள்ள திரையரங்குக்ள், வணிக வளாகம் மூட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், அனைத்துத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 ஏற்கனவே 2 முறை ஆய்வுக்கூட்டம் நடைபெற்ற நிலையில் மீண்டும் ஆலோசனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து முதல்வர் பழனிசாமி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.

அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவு.

(10- 12) அரசுத்தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும்.

அங்கன்வாடி மையங்களையும் மார்ச் 31ஆம் தேதி வரை மூட உத்தரவு.

அங்கன்வாடி மையங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை குடும்பத்தினரிடம் வழங்க உத்தரவு.

மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் மட்டும் தொடர்ந்து இயங்கும்.

கொரோனா எதிரொலி காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா செல்ல மக்கள் திட்டமிட வேண்டாம்.

கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

பிற மாநிலங்களில் இருந்து பேருந்தில் வருபவர்களும் இனி சோதனை செய்யப்படுவார்கள்.

கொரோனா பற்றி வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை.

ஏற்கனவே திட்டமிட்டதை தவிர, திருமண மண்டபங்களில் புதிதாக நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது.

தியேட்டர்கள், வணிக வளாகங்கள், கேளிக்கை பூங்காக்கள் மார்ச் 31 வரை மூடப்பட வேண்டும்.

டாஸ்மாக் பார்கள், கேளிக்கை விடுதிகள், கிளப்கள் மார்ச் 31 வரை மூடப்பட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகள், வணிக வளாகங்கள்,நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியங்களும் மார்ச் 31 வரை மூடப்படும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகள், வணிக வளாகங்கள்,நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியங்களும் மார்ச் 31 வரை மூடப்படும்.

கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் வழிகாட்டு நெறிமுறைகளை தனியார் மற்றும் பொது நிறுவனங்கள் தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.

மத்திய மற்றும் மாநில நல்வாழ்வுத்துறை வழங்கி உள்ள அறிவுரைகளை பொது, தனியார் நிறுவனங்கள் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான அனைத்து உத்தரவுகளும் நாளை முதல் அமலுக்கு வருகிறது என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 comment:

 1. TRB-POLYTECHNIC MATHS & ENGLISH
  One Month Special Training Programme Conducted by
  Polytechnic Exam Cleared staff and Retired Govt Professor
  Highlights This Programme Given material , Doubt session , Unit wise test, Special care for individual.
  Class starts march 22nd
  FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE.
  CELL -9944500245 (Material available) English only

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி