ஒருநாள் ஊதியம் அனைவருக்கும் பிடிக்கப்படுமா? - kalviseithi

Mar 29, 2020

ஒருநாள் ஊதியம் அனைவருக்கும் பிடிக்கப்படுமா?


அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படுமா? - விளக்கம்.

ஒருநாள் ஊதியப்பிடித்தம் என்பது சில இயக்கங்கள் எடுத்த முடிவு.

அதற்கு அந்தந்த இயக்கங்களின் உறுப்பினர்கள் விரும்பினால் கட்டுப்படலாம்.

சிலர் தன் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு செலுத்தாமல் இருக்கலாம் இது அவரவர்களின் விருப்பம்.

சில ஆசிரியர்கள் ஒருநாள் ஊதியத்திற்கு மேலாக நேரிடையாக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பணம் செலுத்தி வருகின்றனர். இதுவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.


நம் விருப்பத்தைக் கேட்காமல் நம்மிடம் ஊதியப்பிடித்தம் செய்ய முடியாது.

இந்தமாத ஊதிய பட்டியல் கருவூலம் சென்றுவிட்டதால், அடுத்த மாத ஊதியத்தில் தான் பிடித்தம் செய்ய முடியும்.

இம்மாதம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் முழு ஊதியம் தங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் அடுத்த மாதத்திற்கான ஊதியத்தில் தங்கள் விருப்ப கடிதம் அளித்தால் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும்.

2 comments:

  1. ஒரு சிறு தொகையை அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் செல்வந்தர்கள் உணவாக அவரவர் வசிக்கும் ஊரில் உள்ள ஏழைகளுக்கு வழங்கலாம்

    ReplyDelete
  2. நிவாரண நிதி வழங்குவதைவிட தம் அருகில் உள்ள அன்றாட தொழிலாளர்களுக்கு காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கலாம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி