வனக்காப்பாளர் தேர்வு பணிகள் ஒத்திவைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 27, 2020

வனக்காப்பாளர் தேர்வு பணிகள் ஒத்திவைப்பு


ஊரடங்கு உத்தரவு காரணமாக, வனக்காப்பாளர் தேர்வுக்கு பிந்தைய நடவடிக்கைகள் ஒத்திவைக்கப் பட்டுள்ளதாக, வனத்துறை அறிவித்து உள்ளது.தமிழகத்தில் காலியாக உள்ள, 320 வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் தேர்வு, மார்ச், 8ல் நடத்தப்பட்டது. இதில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து, மார்ச் இறுதியில் விடை குறிப்புகள் வெளியிடவும், ஏப்ரல் முதல் வாரத்தில் சான்றிதழ் சரி பார்த்தல், உடல் திறன் ஆய்வு உள்ளிட்ட நடைமுறைகளை மேற்கொள்ள, வனத்துறை திட்டமிட்டு இருந்தது.தற்போது, கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்காக, 21நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், இந்நடைமுறைகளை மேற்கொள்ள முடியாது. அதனால், வனக்காப்பாளர் பணிக்கான, தேர்வுக்கு பிந்தைய நடைமுறைகள் ஒத்திவைக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி