பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தினை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த கோரிக்கை! - kalviseithi

Mar 26, 2020

பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தினை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த கோரிக்கை!பொருள் : மாண்புமிகு அம்மாவால் பணியில் அமர்த்தப்பட்ட பகுதி நேர பயிற்றுநர்களின் ( சிறப்பாசிரியர்கள் ) மாத தொகுப்பூதியமான ரூ . 7 , 700 / - ( ஏழாயிரத்து எழுநூறு ) யை அவர்களுடைய சொந்த வங்கி கணக்கிலேயே நேரடியாக செலுத்துமாறு கோருதல் , சார்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் 6 , 7 , 8 - ஆகிய வகுப்புகளுக்கு சிறப்பு பாடங்களை போதிக்கும் பகுதிநேர பயிற்றுநர்களுக்கு அவர்கள் பணிபுரியும் பள்ளியின் வங்கி கணக்கில் ( SMC ) வரவு வைக்கப்பட்டு பிறகு அப்பள்ளியின் மேலாண்மைக் குழு தலைவரும் ( School Management Committee ) பள்ளி தலைமை ஆசிரியரும் இணைந்து காசோலையில் கையொப்பம் இட்டு அதற்கானப் படிவத்தையும் பூர்த்தி செய்து பிறகுதான் பகுதிநேர பயிற்றுநர்களின் வங்கி கணக்கிற்கு ஒவ்வொரு மாதமும் ஊதியம் செலுத்தப் படுகிறது . இதில் பல சிக்கல்களும் பல போராட்டங்களின் இடையே தான் ஒவ்வொரு மாதமும் ஊதியம் பெறுகிற நிலையே உள்ளது . தற்போது " கொரோனா " என்றொரு உயிர்க் கொல்லியால் அதனை தடுக்கும் வகையில் பல நல்ல நடவடிக்கைகளை நம் பாரத பிரதமரும் , நம் மாநில முதலமைச்சரும் மேற்கொண்டு வருகிறார்கள் . ஒருவருக்கொருவர் தன்னை தானே தனிமை படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமும் கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது . SMC தலைவரை சந்திப்பதிலும் ஊதியத்திற்கான காசோலையில் கையொப்பம் பெறுவதிலும் மிகுந்த அலைச்சலும் சிரமங்களும் ஏற்பட்டு இம்மாதத்திலிருந்தே சம்பளம் பெறுவதில் காலதாமதம் ஏற்படும் . இதனால் பகுதிநேர பயிற்றுநர்களின் குடும்பங்கள் மேலும் பல துயரங்களுக்கும் துன்பங்களுக்கும் வழியை ஏற்படுத்தி விடலாம் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழலும் ஏற்படலாம் . பகுதிநேர பயிற்றுநர்களே தம் ஊதியத்துக்கான அனைத்து பணிகளையும் தம் பள்ளியில் இருந்தே மேற்கொண்டு வருவதால் " கொரோனா ' தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும் அவசியமும் ஏற்பட்டுள்ளது . ஆகவே மேற்காண் பொருள்படி போர்க்கால நடவடிக்கையை மேற்கொண்டு உதவுமாறு தங்களை கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .

1 comment:

  1. Epo tha smc problem thariyutha.goverment ku purucha seri yha

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி