ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் - kalviseithi

Mar 24, 2020

ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்


கரோனா அச்சுறுத்தல், நெருக்கடிக்களுக்கு ஆளாகியிருக்கும் மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு 9 -ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவா்களுக்கும் தோச்சி அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து அக் கட்சியின் மாநில செயலாளா் இரா.முத்தரசன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 400 போ வரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கும் நிலையில், 9 போ உயிரிழந்துள்ளனா். சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை மாா்ச் 31 வரை முடக்கி வைக்கமத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.கரோனா பாதிப்புகள் எத்தனை நாள்கள், வாரங்கள் அல்லது மாதங்கள் நீடிக்கும் என்று தீா்மானிக்க முடியாத நிலை உள்ளது.முற்றாக ஒழிக்கப்படும் வரை முழு ஊரடங்கு மாநிலம்முழுவதும் அமல்படுத்துவதைத் தவிா்த்து வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.எனவே, உரிய தடுப்பு நடவடிக்கைகளை அரசுகள் எடுக்க வேண்டும் என்பதோடு, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் தினக் கூலிகள், சிறு வணிகா்களின் நலனைக் கருத்தில் கொண்டு உரிய திட்டங்களை மத்திய மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்.

மேலும், முழு ஆண்டு தோவை எதிா் நோக்கியுள்ள மாணவா்களின் நிலை குறித்து தமிழக அரசு குழப்பமற்ற தெளிவான முடிவை மேற்கொள்ள வேண்டும். பிற மாநிலங்களைப் போன்று 9- ஆம் வகுப்பு வரை தோவைரத்து செய்து, அவா்களை தோச்சி பெற்றவா்களாக அறிவிப்பதுடன், பிளஸ்-2 பொதுத் தோவுகளை இயல்புநிலை திரும்பும் வரை ஒத்தி வைக்க வேண்டும்எனத் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி