ஆசிரியர்களுக்கு லீவு விடுங்க, தமிழக அரசுக்கு வந்த அவசர கோரிக்கை. - kalviseithi

Mar 18, 2020

ஆசிரியர்களுக்கு லீவு விடுங்க, தமிழக அரசுக்கு வந்த அவசர கோரிக்கை.


ஆசிரியர்களுக்கு லீவு விடுங்க,  தேர்வு அறையில் இதை தெளியுங்க..!! கொரோனோவால் தமிழக அரசுக்கு வந்த அவசர கோரிக்கை.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்திட தேர்வு மையங்களாகச் செயல்படும் பள்ளிகளுக்கு கிருமிநாசினி தெளித்திட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது இது குறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:- உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் எளிதில் தொற்றும் கொரோனா வைரஸ்சீனாவில் தொடங்கி இத்தாலி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட. நாடுகளில் விஸ்வரூபம் எடுத்து தாக்கி வருகிறது , இந்தியாவையும் இது விட்டுவைக்க வில்லை. கர்நாடகா,டெல்லியில் தலா ஒருவர் வீதம் இரண்டுபேரை பலிவாங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுத்திட. பள்ளிகள்,கல்லூரிகள்,விளையாட்டு அரங்குகள், மால்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு மார்ச் 31 வரை விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவது வரவேற்புக்குரியது. மேலும் 10,11,12, ஆம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வு நடக்கின்ற தேர்வு மையங்களாகச் செயல்படும் பள்ளிகளில் மாணவர்களின்நலன்கருதி தினந்தோறும் கிருமிநாசினி தெளித்திட வேண்டுகின்றோம். மேலும் மாணவர்களுக்கு விடுமுறையளித்துவிட்டு ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைப்பது பல்வேறு சிரமங்கள் உள்ளது.

மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது. கொரோனா வைரஸ் கொடுமையிலிருந்து தற்காப்பு நடவடிக்கையாக ஆசிரியர்களையும் விடுவிக்க வேண்டுகிறோம்.தமிழ்நாட்டில் சுமார் 10,000 க்கும் மேற்பட்ட ஈராசிரியர் பள்ளிகள் 1000க்கும் மேற்பட்ட ஓராசிரியர் பள்ளிகள் உள்ளிட்ட 35 ஆயிரம் அரசுப் பள்ளிகள் இயங்கிவருகிறது. இப்பள்ளிகளில் 2 லட்சத்து 96 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.மேலும் "சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும்" ஆசிரியர்களுக்கும் தற்காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம்.

அதேநேரத்தில் பெரும்பாலான ஆசிரியர்கள் தேர்வுப்பணியில் ஈடுபட்டுவருகிறோம். மாணவர்களுக்கு விடுமுறை விடும்போது ஆசிரியர்களுக்கும் விடுமுறை வழங்குவதற்கு ஆவனச்செய்தும் தேர்வு நடைபெறும் அனைத்துப்பள்ளிகளுக்கும் கிருமிநாசினி தெளித்திட வேண்டியும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 comments:

 1. Teachers leave கேட்கவில்லை. We have lot of work in school. தவறான செய்திகள் பதிவிட வேண்டாம்

  ReplyDelete
 2. விடுமுறை தேவையில்லை...

  ReplyDelete
 3. குடுமிபிடி சண்டை போடாமல் இருந்தால் சரி

  ReplyDelete
 4. சங்க நிர்வாகிகள் ஆசிரியர்கள் சார்பாக தாங்களாகவே விடுமுறை விடுங்கள் என்று கேட்பது தவறு.... இதனால் மக்களிடத்தில் எங்களுக்கு கெட்ட பெயரே கிடைக்கும்.... எங்களை விட்டு விடுங்கள்.. நாங்கள் சும்மா இருந்தாலும் பரவாயில்லை பள்ளிக்கே சென்று வருகிறோம்

  ReplyDelete
 5. விடுமுறை தேவையில்லை....ஆயிரம் முறை வேண்டுமானாலும் சொல்கிறேன் விடுமுறை தேவையே இல்லை. ஆசிரியர்கள் விடுமுறை கேட்கவில்லை

  ReplyDelete
 6. We have green sheet work, 40 marks entry work, rank card work, etc....

  ReplyDelete
 7. இந்த தவறான செய்தி பதிவிட்டவன் கொரானாவால் செத்து மடியட்டும்.
  இது அனைத்து ஆசிரியர்களின் சாபம்!

  ReplyDelete
 8. Evanda leave kettan, apo matha company factory office la work pandra alunga elam manushan ilaya.... Leave ketta kena koooomutta mattum manushana...thooo

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி