இயற்பியல் தேர்வு கடினம். சென்டம் எண்ணிக்கை குறையும்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 17, 2020

இயற்பியல் தேர்வு கடினம். சென்டம் எண்ணிக்கை குறையும்!


பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவ , மாணவிகள் தெரிவித் தனர் . இதன் காரணமாக , சென்டம் எடுப்போரின் எண்ணிக்கை குறையக் கூடும் . பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2 - ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது .

நேற்று இயற்பியல் , பொருளாதாரம் , கம்ப் யூட்டர் சயின்ஸ் ஆகிய தேர்வுகள் நடைபெற்றன . இயற்பியல் தேர்வு குறித்து மாணவர்கள் கூறும் போது , " ஒரு மதிப்பெண்வினாக்கள் சற்று கடின மாக இருந்தன . அனைத்துப்பாடத் தையும் நன்கு படித்திருந்தால் மட்டுமே ஒருமதிப்பெண்பகுதியில் அனைத்து வினாக்களுக்கும் சரி யாக விடையளிக்க முடியும் . பாடத் தின் உள்ளே இருந்து கேட்கப்பட் டிருந்தாலும் அவை மறைமுகமாக இருந்தன .

நன்கு புரிந்து படித்த மாணவர்களால்தான் விடையளிக்க முடியும் . பெரிய வினாக்கள் பகுதியில் நேரடியான வினாக் களும் , மறைமுகமான வினாக்களும் கலந்து இடம்பெற்றிருந்தன என்று தெரிவித்தனர் .

 ஒரு மதிப்பெண் பகுதியில் வினாக்கள் கடினமாக கேட்கப்பட் டிருப்பதால் சென்டம் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறையலாம் .

ஏற்கெனவே நடந்து முடிந்த கணிதத் தேர்வும் கடின மாக இருந்ததாகவே பெரும் பாலான மாணவ , மாணவிகள் தெரிவித்திருந்தனர் . பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு கணிதம் , இயற்பியல் , வேதியியல் ஆகிய மூன்று பாடங்களின் மதிப்பெண் கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகின்றன .

அந்தவகையில் கணிதமும் , இயற்பியலும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருது வதால் இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான கட்ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது . 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி