சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் - kalviseithi

Mar 27, 2020

சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்


சி.பி.எஸ்.இ., பள்ளிகள், இணைப்பு அந்தஸ்துபெற, விண்ணப்பிப்பதற்கான அவகாசம், ஏப்ரல், 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் பாட திட்டத்தில் செயல்பட உள்ள பள்ளிகள், ஆண்டுதோறும்இணைப்பு அந்தஸ்து பெற வேண்டும்.

நடப்பு கல்வி ஆண்டில், இந்த அந்தஸ்தை பெறுவதற்கு பள்ளிகள் தரப்பில் விண்ணப்பிக்க, மார்ச், 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. தற்போது, கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, நாடு முழுதும், 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், விண்ணப்பம் தாக்கல் செய்வதற்கான அவகாசம், ஏப்., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவை, சி.பி.எஸ்.இ., செயலர்,அனுராக் திரிபாதி பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி