ஒழுங்கீனமற்ற செயல்களில் ஈடுபடவில்லை என பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களிடமிருந்தும் அறிக்கையாக பெற கல்வி அலுவலர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 19, 2020

ஒழுங்கீனமற்ற செயல்களில் ஈடுபடவில்லை என பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களிடமிருந்தும் அறிக்கையாக பெற கல்வி அலுவலர் உத்தரவு.



திருவள்ளூர் , மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் நாளில் பெறப்பட்ட மனுவில் கீழ்காணுமாறு புகார் பெறப்பட்டுள்ளது .

1 . திருத்தணி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு முழுமையாக பாடம் நடத்தாமல் தங்கள் வீடுகளிலும் தனியார் மையங்களிலும் காலை , மாலை நேரங்களில் மாணவர்களிடம் அதிக தொகையினை பெற்றுக் கொண்டு அரசு விதிகளுக்கு புறம்பாக டியூஷன் எடுக்கிறார்கள் .

2 . ஒருசில ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு கட்டுப்படாமல் கட்ட பஞ்சாயத்து நடந்துதல் . மேற்காணும் புகார் குறித்து 11.02.2020 தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

திருவள்ளூர் , மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறை கடிதத்தில் இம்மனுவின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு முடிவான பதிலறிக்கையினை அனுப்ப கோரியுள்ளார் . எனவே , அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மேற்காண் ஒழுங்கீனமற்ற செயல்களில் ஈடுபடவில்லை என்பதற்கு பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களிடமிருந்தும் அறிக்கையாக பெற்று கோப்பில் பராமரிக்கவும் , தலைமை ஆசிரியரின் அறிக்கையினை மட்டும் திருத்தணி , மாவட்டக் கல்வி அலுவலகத்தில் அளிக்குமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேற்காண் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் பள்ளி ஆசிரியர்கள் எவரேனும் இருப்பின் அவர்களின் பெயர் பட்டியலினை உயர் அலுவலருக்கு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைக்கத்தக்க வகையில் இவ்வலுவலகம் அனுப்பி வைக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது . எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கையினை கண்டிப்பாக அளித்தல் வேண்டும் . மேற்காண் ஒழுங்கீன செயலில் ஈடுபடும் ஆசிரியர்கள் குறித்து புகார் ஏதும் பெறப்படின் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழுபொறுப்பேற்க நேரிடும் .

2 comments:

  1. வாக்கியம் தவறு...
    அது "ஒழுங்கீனமற்ற செயல்களில் ஈடுபடவில்லை" அல்ல...
    "ஒழுங்கீன செயல்களில் ஈடுபடவில்லை" என்பதே சரி...
    Oru section...
    Oru superintendent...
    Oru P.A...
    Thaandi letter d.e.o. sign panraru..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி