ஆசிரியர்களின் ஊதியத்தை தாமதமின்றி வழங்க வேண்டும் மத்திய அரசு அறிவுறுத்தல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 26, 2020

ஆசிரியர்களின் ஊதியத்தை தாமதமின்றி வழங்க வேண்டும் மத்திய அரசு அறிவுறுத்தல்!



ஆசிரியர்களுக்கான ஊதியத்தை தாமதமின்றி வழங்க வேண்டும் என அனைத்து மாநில பள்ளிக் கல்வித்துறைக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவுறுத்தியுள்ளது. கரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் அடுத்த 3 வாரத்துக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது .

இதையடுத்து தன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்கள் , தன்னாட்சி பெற்ற நிறுவனங்கள் 3 வாரம் மூடப்பட்டிருக்கும் . துறை அதிகாரி கள் மற்றும் பணியாளர்கள் வீடுகளில் இருந்தவாறு பணியாற்றுவார்கள் .

மேலும் , துறைசார்ந்த அனைத்து ஆலோசனைக் கூட்டங்களும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது .

இதேபோல் , ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கான மார்ச் மாத ஊதியம் , ஓய்வூதியம் தாமதமின்றி வழங்கப்படுவதை யும் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் உறுதி செய்ய வேண்டும் .

மேலும் , தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம்  என்சிஇ ஆர்டி நடப்பு கல்வியாண்டுக்கான மாற்று நாள்காட்டியை விரை வாக வெளியிடவும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தி யுள்ளதாக பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி