பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்ய வேண்டிய பணிகள் நாள் வாரியான பட்டியல் DEO வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 19, 2020

பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்ய வேண்டிய பணிகள் நாள் வாரியான பட்டியல் DEO வெளியீடு.



பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைக்கிணங்க , விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு 17.03.2020 முதல் 31.03.2020 வரை விடுமுறை அறிவித்து , பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அலுவலகப்பணிகளை மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது . எனவே இணைப்பில் காணும் பட்டியலில் தெரிவித்துள்ளவாறு ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பணிகளை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

மேலும் இப்பணிகளை அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , வட்டாரக் கல்வி அலுவலர் , வட்டார வள மைய மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கவனிக்குமாறும் , இப்பணியில் சுணக்கம் ஏதும் இன்றி பணியினை கண்காணிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் இப்பணிகள் சார்ந்த தொகுப்பு அறிக்கையினை இப்பணிகள் முடிந்தவுடன் தயார் செய்து இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு : பணிகள் சார்ந்த உரிய பட்டியல்

4 comments:

  1. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா...........

    ReplyDelete
  2. staff details dont edit at this time you must see kalviseithi date 18.03.2020 annoncement.

    ReplyDelete
  3. staff details dont edit at this time you must see kalviseithi date 18.03.2020 annoncement.

    ReplyDelete
  4. staff details dont edit at this time you must see kalviseithi date 18.03.2020 annoncement.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி