DEE - விதி 17 ( பி ) - ன்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டவர்கள் விவரம்கோரி இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 7, 2020

DEE - விதி 17 ( பி ) - ன்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டவர்கள் விவரம்கோரி இயக்குநர் உத்தரவு.


தொடக்கக்கல்வி செயல்முறைகளில் இவ்வியக்கக கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி / நகராட்சி / அரசு துவக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் மீது தமிழ்நாடு குடிமைப்பணி ( ஒழுங்கு முறைகள் மற்றும் மேல்முறையீடு ) விதிகளில் விதி 17 ( பி ) - ன்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டவர்கள் பெயர் , விவரம் , விசாரணை அலுவலர் நியமனம் செய்யப்பட்ட விவரம் , விசாரணை அறிக்கை பெறப்பட்ட விவரம் மற்றும் இறுதி ஆணை வழங்கப்பட்ட விவரங்களை குறிப்பிட்ட படிவத்தில் பூர்த்தி செய்து 02 . 03 . 2020 - க்குள் மின்னஞ்சல் மூலம் அனுப்புமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் கோரப்பட்டது . ஆனால் இதுநாள் வரை முழுமையான விவரங்கள் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பெறப்படவில்லை . எனவே தங்கள் மாவட்டத்தில் ஊராட்சி , நகராட்சி / அரசு தொடக்கப்பள்ளி / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் , தலைமை ஆசிரியர்கள் மீது 17 ( பி ) குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பின் அவர்களுக்கு உரிய விசாரணை அலுவலரை இச்செயல்முறைகள் கிடைக்கப்பெற்ற இரண்டு வாரங்களுக்குள் நியமனம் செய்து விசாரணை அறிக்கையினைப் பெற அறிவுறுத்தப்படுகிறது . மேலும் , விசாரணை அறிக்கையில் குற்றச்சாட்டு நிரூபணமானால் கூடுதல் தன்னிலை விளக்கம் பெற்று இறுதி ஆணை வழங்க துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள் . விசாரணை அலுவலர் நியமனம் செய்வதில் காலதாமதம் ஏற்படுவதால் தனியர்கள் ஓய்வு பெறும் நாளில் ஓய்வு பெற அனுமதிக்க இயலாத நிலை ஏற்படுகிறது . எனவே மாவட்டக் கல்வி அலுவலர்கள் இப்பொருளில் தனிகவனம் செலுத்தி விரைவு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது .

2 comments:

  1. I was suspended twice without charges on 2013 and 2016. But till now FINAL ORDER not given for the above said suspension. I made so many complaints but couple of days back I have given complain to the DEE. Now i am happy to see the above proceedings
    Dancia Fernando, sec gr teacher, ezhichur, padappai, KPM

    ReplyDelete
  2. I was suspended twice without charges on 2013 and 2016. But till now FINAL ORDER not given for the above said suspension. I made so many complaints but couple of days back I have given complain to the DEE. Now i am happy to see the above proceedings
    Dancia Fernando, sec gr teacher, ezhichur, padappai, KPM

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி