Flash News : கூடுதல் எண்ணிக்கையில் பள்ளிகளை தரம் உயர்த்தி சட்டப் பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வர் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2020

Flash News : கூடுதல் எண்ணிக்கையில் பள்ளிகளை தரம் உயர்த்தி சட்டப் பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வர் அறிவிப்பு.


110 விதி இன்றைய அறிவிப்பு
50 நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாகவும்
50 பள்ளி மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்படும்

CM Announcement In Assembly ( 20.03.2020 ) - Download here

உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை மேலும் உயர்த்தவும் , கிராமப்புற மாணவர்கள் பயன் பெறவும் , உயர் கல்வித் துறை மூலம் ஏழு புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் . வரும் கல்வி ஆண்டு முதல் | இக்கல்லூரிகள் செயல்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் .

நான் 13 . 3 . 2020 அன்று பேரவையில் , சட்டப்பேரவை விதி 110ன் கீழ் , பள்ளிக் | கல்வித் துறை சார்பாக வெளியிட்ட அறிவிப்புகளில் , வரும் கல்வியாண்டில் 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் , 30 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தேன் . தற்போது , பல்வேறு தரப்பினரிடமிருந்தும் , பெற்றோர்களிடமிருந்தும் பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் . ஏற்கனவே அறிவித்த 15 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு பதிலாக . 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் , மேலும் 30 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு பதிலாக 50 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் , வரும் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன் .

9 comments:

  1. Eppavumaeee 100 schools thanaee upgrade pannuvanga.....ippo enna 50 .....???? Ithil ethunum arasiyal undaaaa..??????

    ReplyDelete
  2. 2013 டெட் பாஸ் பண்ணவங்க முதல்வர நேர்ல பார்த்து பேசுங்க நல்லது நடக்கட்டும்

    ReplyDelete
  3. No posting 50 school upgrade
    Ithukkm kamand eappadinna super sir
    Vekkakedu

    ReplyDelete
  4. When sir this year 2020 tet exam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி