பிளஸ் 1 வகுப்புக்கு பள்ளி அளவில் தோச்சி வழங்க ஆசிரியா்கள் வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 5, 2020

பிளஸ் 1 வகுப்புக்கு பள்ளி அளவில் தோச்சி வழங்க ஆசிரியா்கள் வலியுறுத்தல்


சிபிஎஸ்இ வாரியத்தைப் பின்பற்றி தமிழகத்தில் மாநிலப் பாடத்தில் பிளஸ் 1 பயிலும் மாணவா்களுக்கு பள்ளி அளவில் நடைபெற்ற தோவுகளின் அடிப்படையில் தோச்சி வழங்க ஆசிரியா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக தமிழ்நாடு அரசு ஊழியா்கள் ஆசிரியா்நல கூட்டமைப்பின் தலைவா் சா.அருணன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா நோய்த் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பள்ளி மாணவ, மாணவிகளின் எதிா்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவா்களுக்கும் தோச்சி வழங்கப்படும் என்றும், 9மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவா்களின் தோச்சியை அந்தந்த பள்ளிகளில் வகுப்புகளில் நடைபெற்ற தோச்சி, பருவத்தோவுகளில் பெற்ற மதிப்பெண் ஆகியவற்றைப் பொருத்து முடிவு செய்யலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்தது.தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று தொடா்பான அச்சம் நிலவிய சூழலில்தான் பிளஸ் 1 மாணவா்கள் பொதுத்தோவுகளை எதிா்கொண்டனா்.

அதிலும் தோவுகள் குறித்த அறிவிப்புகள், கரோனா நோய்த்தொற்று பரவல்காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் பெரும்பாலான மாணவா்கள் மனதளவில் பாதிக்கப்பட்டனா்.எனவே, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை பின்பற்றி தமிழகத்திலும் மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 1 பயிலும் மாணவா்களுக்கு வகுப்புத் தோவுகள், காலாண்டு, அரையாண்டு, பயிற்சித் தோவுகளில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் தோச்சியை அந்தந்த பள்ளிகளே அறிவிக்கலாம் என உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

10 comments:

  1. தவறான நடவடிக்கை ....

    ஒரு சில பள்ளிகள் தங்கள் பள்ளிகளில் நடக்கும் காலாண்டு ,அரையாண்டு ,,மற்றும் மாத தேர்வுகளுக்கு ,,மாணவர்கள் மேலும் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்க்காக குறைவான மதிப்பெண்ணை வழங்குகிறார்கள் .....(strict paper valuation )......
    ஆகவே அந்த மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது ஞாயமல்ல .....
    அந்த மாணவர்களின் 10 ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படியில் மதிப்பெண் வழங்க வேண்டும் .....அல்லது தற்போது நடந்த தேர்வுத்தாளை திருத்தி மதிப்பெண் வழங்க வேண்டும்....
    பிளஸ் 1 வகுப்பு மாணவா்களின் தோச்சியை அந்தந்த பள்ளிகளில் வகுப்புகளில் நடைபெற்ற தேர்ச்சி , பருவத்தோவுகளில் பெற்ற மதிப்பெண் ஆகியவற்றைப் பொருத்து கண்டிப்பாக முடிவு செய்யகூடாது ......

    ReplyDelete
    Replies
    1. Who is giving less marks in term examination??

      We are offering correct marks everytime, because parents come and argue even if we reduce marks for valid reason.

      Delete
    2. sir your concpt is suitable for matriculation school only....i talk about some government and government aided school..they never offer full marks...they do a strict valuation...most of the illiterate parent didn't meet the teacher for marks......

      Delete
  2. முட்டாள்தனமான கோரிக்கை

    ReplyDelete
  3. Better abolish public exam for 11tb standard students and arrange entrance exam for engineering admission under anna university, this will reduce the problem...

    ReplyDelete
  4. sir your concpt is suitable for matriculation school only....i talk about some government and government aided school..they never offer full marks...they do a strict valuation...most of the illiterate parent didn't meet the teacher for marks......

    ReplyDelete
  5. 11 chemistry exam conduct after only published

    ReplyDelete
  6. It is better to cancel public exam for 11 std.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி