10ம் வகுப்பு பொதுத்தேர்வு முதல்வர் கையில் முடிவு ; செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 9, 2020

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முதல்வர் கையில் முடிவு ; செங்கோட்டையன்


''பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து, முதல்வர் தான் முடிவு செய்வார்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், கோபி நகராட்சி மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில், கோபி பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்ட, கிருமி நாசினி சுரங்கம் மற்றும் நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தை, அமைச்சர் செங்கோட்டையன் நேற்று துவக்கி வைத்தார்.பின், அமைச்சர் அளித்த பேட்டி: கோபியில், கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கூறி, பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூவருக்கும், கொரோனா வைரஸ் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.கோபி தொகுதியில், 11 ஆயிரத்து, 271 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து, முதல்வர் தான் முடிவு செய்வார். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி குறித்து, கொரோனா நிலைமை சீரான பின்தான்முடிவு செய்ய முடியும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

4 comments:

  1. 10 th standard exam date sollunga
    Because they are in confuse state,so please....

    ReplyDelete
  2. 10 th standard exam date sollunga
    Because they are in confuse state,so please....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி