அங்கன்வாடி ஊழியர்களுக்கு ₹2 லட்சம் - மருத்துவமனையில் இலவச சிகிச்சை - தமிழக அரசு அறிவிப்பு ! - kalviseithi

Apr 21, 2020

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ₹2 லட்சம் - மருத்துவமனையில் இலவச சிகிச்சை - தமிழக அரசு அறிவிப்பு !


கொரோனா தடுப்பு பணியில் பாதிப்படைந்தால் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ₹2 லட்சம் - மருத்துவமனையில் இலவச சிகிச்சை தமிழக அரசு அறிவிப்பு.

 ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை இயக்குனர் கவிதா ராமு வெளியிட்டுள்ள அரசாணை : அத்தியாவசியமான துறைகளில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பணிகளில் ஈடுபடும் ஊழி யர்களுக்கு கொரோனா வைரஸ் மூலம் பாதிப்படைய நேர்ந்தால் இலவசமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம்

மேலும் அவர்களுக்கு கருணைத்தொகையாக ₹2 லட்சம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது . இந்த பணியில் அங்கன்வாடி ஊழியர்கள் பணிபுரிவதால் , யாரேனும் இந் நோய் மூலம் பாதிப்படைய நேர்ந்தால் இலவசமாக மருத் துவமனையில் சிகிச்சை பெறவும் , கருணைத் தொகையாக ₹2 லட்சம் வழங்கப்படும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .

இது குறித்து தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மு . வரதராஜன் கூறுகையில் , " கொரோனா தடுப்பு நடவடிக்கை பணியில் தமிழகம் முழுவதும் 45 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் அவர்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாத நிலை இருந்து வந்தது . தற்போது அரசு அறி வித்த இந்த அறிவிப்பை வரவேற்கிறோம் .

அதே நேரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் , செவிலியர்கள் , தூய்மை பணியாளர்களுக்கு அரசு ஒரு மாதம் ஊக்கத் தொகை வழங்கியுள்ளது . அதே போல கொரோனாவை தடுக்கும் வகையில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அங்கன்வாடி பணியாளர்களுக்கும் ஒரு மாதம் ஊக்கத் தொகை வழங்க வேண்டும் " என்றார் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி