பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை மறு நாள் தொடங்க முடிவு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 28, 2020

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை மறு நாள் தொடங்க முடிவு?



பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை மறு நாள் தொடங்க தேர் வுத்துறை முடிவு செய்துள் ளது . பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 23ம் தேதியு டன் முடிந்தன . தேர்வுகள் நடந்து கொண்டு இருக் கும் போதே , 22ம் தேதி முதன்மைத் தேர்வர்கள் விடைத்தாள் திருத்துவது என்றும் , அதற்கு பிறகு ஆசிரியர்கள் விடைத் தாள் திருத்த வேண்டும் என்றும் தேர்வுத்துறை திட்டமிட்டு இருந்தது . இந்நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் விடைத்தாள் திருத்தும் பணியும் தொடங்கப்ப டாமல் நின்று போனது .

மேற்கண்ட பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்காக தமிழகத் தில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் விடைத் தாள் திருத்தும் மையங்கள் உருவாக்கப்பட்டு , அதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திருத்தும் பணியில் ஈடுப டுத்தப்பட இருந்தனர் . ஊரடங்கு முடிந்த பிறகு இந்த பணியை தொடங்க லாம் என்று தேர்வுத்துறை முடிவு செய்தது .

இந்நிலையில் , மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிப்பதால் , 29ம் தேதிக்கு பிறகு விடைத்தாள் திருத் தும் பணியை தொடங்க தேர்வுத்துறை திட்ட மிட்டுள் ளது . ஆனால் , விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு ஆசிரியர் கள் வருவதற்கு போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை . அதனால் வீடுக ளில் இருந்தே ஆசிரியர் கள் விடைத்தாள் திருத்த வைக்க ஆலோசிக்கப்பட் டது .

ஆனால் அது குறித்து இன்னும் முடிவு செய்யப் படவில்லை . மேலும் , விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு
ஆசிரியர்கள் வந்தால் , ஒரு அறையில் குறைந்தபட்சம் 10 ஆசிரியர்கள் அமர்ந்து விடைத்தாள் திருத்த வேண்டிய நிலை ஏற்படும் . அங்கு கண்காணிப்பு பணியில் இருவர் இருக்க வேண்டும் . திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரி யர்களுக்கு தேவையான எழுது பொருட்கள் உள் ளிட்டவற்றை எடுத்துவர ஒரு வர் தேவை . இதனால் சமூக இடைவெளி இல்லாமல் போகலாம் என்பதால் , ஆசிரியர்கள் வருவதில் சிக்கில் நீடிக்கிறது . அத னால் , ஊரடங்கு குறித்து அரசு தெளிவான முடிவு எடுத்து அறிவித்தால் தான் விடைத் தாள் திருத்தும் பணி தொடங் கும் என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர் .

 ஆனால் , 29ம் தேதிக்கு பிறகு இந்த பணியை தொடங்குவது என்பதில் தேர்வுத்துறை தீவிரமாக இருக்கிறது .

2 comments:

  1. அனைத்து ஊர்களிலும் உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் அந்த உள்ளூர் ஆசிரியர்கள்
    வாரத்திற்கு இரு முறை 50 விடைத்ததாள்களை பெற்று வீட்டில் திருத்தி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தது விட்டு மீண்டும் 50விடைத்தாள் பெற்று செல்லலாலம்.இந்த சுழற்சி S.O,CE கடைப்பிடித்ததால் விடைத்ததாள் பணி இந்நேரம் முடிந்து இருக்கும் இனியவாது
    இந்த முறையை பயன்படுத்தி பாதுகாப்புடன் இப்பணியை நிறைவு செய்யாலலாம் மாண்புமிகு கல்விஅமைச்சர் கவனத்திற்கு எடுத்தது செல்வது.(நமது கல்வி அமைச்சர் மிகவும் வேகமானவர் பள்ளி திறக்கும் முன்னேரே வரும் கல்வி ஆண்டின் பொது தேர்வு அட்டவணை மற்றும் தேர்வு முடிவு வெளிவரும் நாளை அறிவித்து உலகத்திலே எவரும் செய்யாத சாதனையாளர்

    ReplyDelete
  2. Kena kumutaigala first bus a vidunga appuram paper correction pannalam sariya ...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி