பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியே தொடங்க தேர்வுத்துறை முடிவு? - kalviseithi

Apr 28, 2020

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியே தொடங்க தேர்வுத்துறை முடிவு?


பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை மறு நாள் தொடங்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. பிளஸ 2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 23ம் தேதியுடன் முடிந்தன.

தேர்வுகள் நடந்து கொண்டு இருக்கும் போதே, 22ம் தேதி முதன்மைத் தேர்வர்கள் விடைத்தாள் திருத்துவது என்றும், அதற்கு பிறகு ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்த வேண்டும் என்றும் தேர்வுத்துறை திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால்  விடைத்தாள் திருத்தும் பணியும் தொடங்கப்படாமல் நின்று போனது.

மேற்கண்ட பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்காக தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் உருவாக்கப்பட்டு, அதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட இருந்தனர். ஊரடங்கு முடிந்த பிறகு இந்த பணியை தொடங்கலாம் என்று தேர்வுத்துறை முடிவு செய்தது.

இந்நிலையில், மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிப்பதால், 29ம் தேதிக்கு பிறகு விடைத்தாள் திருத்தும் பணியை தொடங்க தேர்வுத்துறை  திட்டமிட்டுள்ளது. ஆனால், விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு ஆசிரியர்கள் வருவதற்கு போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை.

அதனால் வீடுகளில் இருந்தே ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்த வைக்க ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அது  குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.  மேலும், விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு ஆசிரியர்கள் வந்தால், ஒரு அறையில் குறைந்தபட்சம் 10 ஆசிரியர்கள் அமர்ந்து விடைத்தாள் திருத்த வேண்டிய நிலை ஏற்படும்.

அங்கு கண்காணிப்பு பணியில் இருவர் இருக்க வேண்டும். திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தேவையான எழுதுபொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்துவர ஒருவர் தேவை. இதனால் சமூக இடைவெளி இல்லாமல் போகலாம் என்பதால், ஆசிரியர்கள் வருவதில் சிக்கில் நீடிக்கிறது.

அதனால், ஊரடங்கு  குறித்து அரசு தெளிவான முடிவு எடுத்து அறிவித்தால் தான் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.  ஆனால், 29ம் தேதிக்கு பிறகு இந்த பணியை தொடங்குவது என்பதில் தேர்வுத்துறை தீவிரமாக இருக்கிறது.

3 comments:

 1. Sir, Take a decision after TN Govt declaring break of lock down to proceed plus two exam paper valuation.

  ReplyDelete
 2. Sir, Valuation of public exam to be carried out by the PG Assistants in their home is only remody to complete in time.

  ReplyDelete
  Replies
  1. Veetla vokanthukitu vilaiyadikitu paper thiruthunga pongaya wait panniye thiruthalam

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி