அரசு ஊதியம் கொடுத்தும் பெறமுடியாமல் தவிக்கும் 3000 (IED) சிறப்பு பயிற்றுநர்கள் மற்றும் இதர பணியாளர்கள் ஊதியம் கிடைக்க நடவடிக்கைக்கோரி தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர் சங்கத்தின் மாநிலத்தலைவர் சு.சேதுராமன் வேண்டுகோள்
தமிழ்நாடு அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் +2 வகுப்பு வரை பயிலும் 2 இலட்சம் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ( பார்வைகுறைபாடு , செவித்திறன் குறைபாடு , கை கால் இயக்க குறைபாடு , ஆட்டிசம் , மூளை முடக்கு வாதம் , மனவளர்ச்சி குறைபாடு கற்றல் குறைபாடு , அதீத துறுதுறு செயல்பாடு கொண்டவர்கள் என 21 வகையான மாற்றுத்திறன் மாணவர்களுக்கு) சிறப்பு கல்வி , பயிற்சிகள் மற்றும் அரசுநலத்திட்ட உதவிகள் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உள்ளடங்கிய கல்விக்கூறு வழியாக பெற்றுத்தருகின்றோம்.சிறப்பு பயிற்றுநர்களை மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி போதிக்க வேண்டும் என்ற நோக்கில் தொகுப்பூதியத்தில் 1998 முதல் 2002 வரை மாவட்ட தொடக்க கல்வி திட்டம் (DPEP) ல் ஏழு மாவட்டத்தில் பணிபுரிந்து வந்தனர்.
பின்னர் 2002 முதல் 2012 வரை அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) வாயிலாக தொண்டு நிருவனங்களின் (NGO) மூலமாக பணிபுரிந்து வந்தனர்.தற்போது 2018 முதல் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் (Samagra Shiksha) பணிபுரிகின்றனர்.2012 ஜுன் மாதம் தொண்டு நிருவனங்களை அடியோடு இரத்து செய்துவிட்டு மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உள்ளடங்கிய கல்வி திட்டத்தை தமிழக அரசு பள்ளி கல்வி துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து சிறப்பு பயிற்றுநர்களை வட்டார வள மையங்களில் (பி.ஆர்.சி) பணியமர்த்தியது.2015 ஆண்டு ஜூன் மாதம் மாற்றுத்திறன் மாணவர்கள் அதிகம் பயிலும் அரசுப்பள்ளிகளில் சிறப்பு பயிற்றுநர்கள் பணி மாறுதல் செய்யப்பட்டனர்.தற்போது மதிப்பூதியமாக ரூ. 16 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இதில் தற்காலிக பணியாளர்களுக்கு கிடைக்கும் எவ்வித அரசின் சலுகைகளும் இல்லாது தினக்கூலி பணியாளர்களாய் மாற்றுத்திறன் குழந்தைகளுக்காக தொடர்ந்து 20 ஆண்டுகளாக கொத்தடிமை பணியாளர்களைப்போல் பணியாற்றி வருகின்றோம்.2015 இக்காலத்தில் தான் நேரடியாக மாவட்ட திட்ட அலுவலகத்திலிருந்து சிறப்பு பயிற்றுநர்களின் வங்கி கணக்குக்கு வந்த ஊதியம் VEC/SMC க்கு வந்து அங்கிருந்து எங்கள் வங்கி கணக்குக்கு அனுப்பும் நடைமுறையை பகுதிநேர ஆசிரியர்கள் போன்று சிறப்பு பயிற்றுநர்ளுக்கும் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
இதனைக்கருத்தில் கொண்டு கடந்த 27.03.2020 அன்று ஊரடங்கு உத்தரவு இருக்கின்ற இச்சூழ்நிலையில் சிறப்பு பயிற்றுநர்களின் நேரடி வங்கி கணக்கில் ஊதியம் செலுத்திட வேண்டும் என CM தனிப்பிரிவு முதல் அனைத்து கல்வித்துறை உயர் அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் வழியாக கோரிக்கை மணு அனுப்பப்பட்டது.ஆனாலும் எங்கள் உயர் அலுவலர்கள் இதுபோன்ற அசாதரண சூழ்நிலையிலும் பள்ளிகளுக்கு (SMC யில்) எங்கள் ஊதியத்தை விடுவித்து ஊதிய பெறமுடியாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கின்றது.
அதன்பின் 03.04.2020 அன்று எங்களுக்கு ஊதியகிடைக்க நடவடிக்கைகள் எடுக்க கோரி மீண்டும் மின்னஞ்சல் வழியாக கோரிக்கை மணு அனுப்பப்பட்டது.சில மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் IE சிறப்பு பயிற்றுநர்களுக்கு ஊதியம் வழங்க கேட்டுக்கொண்டாலும் அசாதரண சூழ்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியாளர்களின் வங்கி கணக்குக்கு ஊதியம் விடுவிக்க சிக்கல் எழுந்துள்ளது.ஊரடங்கு காலகட்டத்தில் உணவுக்கும் அடிப்படை செலவினத்துக்கும் கூட சம்பளம் பள்ளி SMC வங்கிக்கணக்கில் அரசு வழங்கியும் ஊதியத்தினை பெறமுடியாமல் தவித்துவருகின்றோம்.ஆகவே இவ்வாபத்து காலத்தில் திறன்பட கையாண்டுவரும் மாண்புமிகு.
தமிழகமுதல்வர் அவர்கள் தலையிட்டு இம்மாத ஊதியம் கிடைத்திட வழிவகை செய்திடவும் எதிர்காலத்தில் வட்டாரவள மையம் மூலமாக நேரிடையாக சிறப்பு பயிற்றுநர்களின் வங்கிகணக்கில் ஊதியம் கிடைத்திடவும்,எங்களை கருணையின் அடிப்படையில் 20 ஆண்டு கால சேவையை கருத்தில் கொண்டு பணிநிரந்தரம் செய்திடவும் ஆவனம் செய்யுமாறு தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர் சங்கம் சார்பில் பணிந்து வேண்டுகின்றேன்.
சு.சேதுராமன்.
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர் சங்கம் .
7402615813
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி