புதிய பாடத்திட்ட புத்தகம் படியுங்கள்; பள்ளி ஆசிரியர்களுக்கு ஆலோசனை - kalviseithi

Apr 12, 2020

புதிய பாடத்திட்ட புத்தகம் படியுங்கள்; பள்ளி ஆசிரியர்களுக்கு ஆலோசனை


கொரோனா விடுமுறை நாட்களில், புதிய பாடத்திட்ட புத்தகங்களை படித்து, பயிற்சி பெறுமாறு, ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக, ஒரு மாதமாக விடுமுறையில் உள்ள ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வி அதிகாரிகள் சார்பில், பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதாவது, 'வீட்டில் இரு; விலகி இரு' என்ற விதிகளை பின்பற்றி,ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினரை, கொரோனா பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ள வேண்டும்.அதேநேரத்தில், விடுமுறை காலத்தை, அடுத்த கல்வி ஆண்டுக்கான முன்தயாரிப்பு காலமாக எடுத்து, கற்பித்தல் பணிகளுக்கான திட்டங்கள் தயாரிக்க வேண்டும்.இது குறித்து, முதன்மை கல்வி அதிகாரிகள் தரப்பில், ஆசிரியர்களுக்கு, 'வாட்ஸ் ஆப்'களில் தகவல்கள் அனுப்பப்படுகின்றன.அதில், அனைத்து ஆசிரியர்களும், இந்த விடுமுறை காலத்தில்,தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்துக்கான பாடங்களை படித்து, எளிதான கற்பித்தலுக்கு தயாராக வேண்டும்.

கடந்த கல்வி ஆண்டில், புதிய பாட புத்தகங்களை படிக்கவே நேரம் இல்லை என, பல ஆசிரியர்கள் கூறிய நிலையில், தற்போது கிடைத்துள்ள நேரத்தை, நல்ல முறையில் பயன்படுத்தி, வரும் கல்வி ஆண்டில், மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்க வேண்டும் என, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

7 comments:

 1. படித்த ஆசிரியர்களை விட தினமும் படிக்கும் ஆசிரியர்களே தேவை.

  ReplyDelete
  Replies
  1. உண்மை. உங்கள் குழந்தைகளை ஒருபோதும் படித்த ஆசிரியர்களிடத்தில் விடாதீர்கள். மாறாக தினமும் படிக்கின்ற ஆசிரியர்களிடத்தில் விடுங்கள் - கலீல் ஜிப்ரான்..

   Delete
 2. நல்லது! படித்தவர்கள்
  ஆட்சி செய்தால்
  ஆசிரியர்களும் படிப்பார்கள்!

  ReplyDelete
 3. MHRD's educational Apps- SWAYAM, DIKSHA, e-Pathshala. May the Lord Jesus bless the hardwork of teachers.

  ReplyDelete
 4. அத்தனை அனுபவம் இருந்தாலும் ஆசிரியரானவர்கள் அனுதினமுமம் படித்துக் கொண்டுதான் உள்ளனர்.
  படித்துக் கொண்டே இருப்பதன் மூலமாக மட்டுமே அருமையாக பாடம் நடத்த முடியும். .

  ReplyDelete
 5. Use ICT by Hi- Tech Lab Pa....

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி