இதுவரை கரோனாவால் நுழைய முடியாத ஒரு நாடு உண்டு! அது எந்த நாடு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 3, 2020

இதுவரை கரோனாவால் நுழைய முடியாத ஒரு நாடு உண்டு! அது எந்த நாடு?


உலக நாடுகளை உலுக்கியிருக்கும் கரோனா தொற்று நுழையாத ஒரு நாடு உண்டு என்றால் அது வட கொரியா என்று அறியப்படுகிறது.

வட கொரியாவில் தற்போது கரோனா அறிகுறி மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என சுமார் 500 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த வாரத் துவக்கத்தில் இது 2,280 ஆக இருந்த நிலையில், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு கரோனா அறிகுறி தென்படவில்லை என்று பலரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வடகொரியாவில் இதுவரை ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றும், எனினும், தொற்று ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கரோனா பரவல் தீவிரமாகும் முன்பே எல்லைகளை மூடி, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, வெளிநாட்டினர் உடனடியாக அவர்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வைத்து, பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, வட கொரியாவில் இதுவரை யாருக்கும் கரோனா பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், தனிமைப்படுத்தப்படுதல் நடவடிக்கை மிகவும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த தகவலில் பல உலக நாடுகளுக்கும் சந்தேகம் இருந்தாலும், கரோனா பரவத் தொடங்கியதுமே அதாவது ஜனவரி முதல் வாரத்திலேயே, வட கொரியா தனது எல்லைகளை மூடியதோடு, கரோனாவின் பிறப்பிடமான சீனாவிடம் இருந்து அனைத்து வணிகத் தொடர்புகளையும் ஒட்டுமொத்தமாக நிறுத்தி விட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி