மருத்துவம் சார்ந்த படிப்புகளை ஆன்லைனில் கற்பிக்க திட்டம் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் ஏற்பாடு - kalviseithi

Apr 5, 2020

மருத்துவம் சார்ந்த படிப்புகளை ஆன்லைனில் கற்பிக்க திட்டம் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் ஏற்பாடு


ஊரடங்கு அமலில் இருக்கும் சூழ்நிலையில் மருத்துவம் சார்ந்த படிப்புகளை ஆன்லைனில் கற்பிக்க எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த காலகட்டத்தில் மருத்துவம் சார்ந்த படிப்புகளை (செய்முறை படிப்புகளை தவிர), ஆன்லைனில் கற்பிக்க தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்து வருகிறது.எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் 39 மருத்துவ கல்லூரிகள், 20 பல் மருத்துவ கல்லூரிகள், 185செவிலியர் கல்லூரிகள், 70 பார்மஸி கல்லூரிகள், 45 பிசியோதெரபி கல்லூரிகள் வருகின்றன.இதில் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான படிப்புகளை ஆன்லைன் மூலம் டிஜிட்டல் முறையில் கற்பிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதற்காக அந்தந்த துறை சார்ந்த பாடப்பிரிவுகளில் வல்லுநர்களாக இருப்பவர்களை தேர்வு செய்து, வகுப்புகள் வீடியோவாக தயாரிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.

இதற்காக டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துடன், டி.சி.எஸ்.-ன்துணை நிறுவனமான ‘ஐ.ஓ.என்.’ நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது. இவர்கள் ஒருவருடத்துக்கு இலவசமாக இந்த கற்பித்தல் நடைமுறையை செயல்படுத்த உள்ளனர். தற்போது ஆன்லைனில் டிஜிட்டல் மூலம் கற்பிப்பதற்கான அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் கூறியதாவது:-முதலில் ஆன்லைனில் வீடியோவை பதிவு செய்து கற்பிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதன்பின்னர், மாணவர்கள் கருத்துகளின் அடிப்படையில் ஆன்லைனில் நேரலையில் வகுப்புகள் நடத்தவும் திட்டமும் இருக்கிறது.அடுத்தவாரத்தில் இதை நடைமுறைப்படுத்த உள்ளோம்.

இதில் செய்முறை (பிராக்டிகல்) பாடங்களை கற்றுத்தர முடியாது. அது கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கியதும், கற்றுத்தரப்படும். ஊரடங்கு முடிந்த பிறகும், இந்த நடைமுறையை தொடர இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி