கொரோனாவை தடுக்க நோய் எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்ள தமிழக அரசு பரிந்துரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 26, 2020

கொரோனாவை தடுக்க நோய் எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்ள தமிழக அரசு பரிந்துரை


தமிழகத்தில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், போலீசார் மற்றும் கொரோனா பாதிப்புள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள், நோய் எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்ள, அரசு பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்து, சுகாதாரத்துறை செயலர், பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள், போலீசார் ஆகியோர், தங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்வது அவசியம்.அதேபோல, கொரானோ பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களும், தங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்.

அதற்கு சாப்பிட்ட வேண்டிய மருந்துகள்:

*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், ஜிங்க் மருந்து - 150 மி.கி., அளவிற்கு, தினமும் ஒன்று என்ற வீதம், 10 நாட்கள் உட்கொள்ள வேண்டும்.

*விட்டமின் - சி அல்லது அனைத்து வகையான விட்டமின் மாத்திரை - 500 மி.கி., அளவில், தினமும், 10 நாட்களுக்குஉட்கொள்ள வேண்டும்

*நிலவேம்பு குடிநீர் அல்லது கபசுர குடிநீர் பருக வேண்டும். நிலவேம்பு மற்றும் கபசுர பொடி, 5 கிராம் அளவில் எடுத்து, 240 மில்லி தண்ணீரில் காய்ச்சி, அது, 60 மில்லியாக குறையும் வரும் வரை, நன்கு கொதிக்க வைக்க வேண்டும் .

*இந்த கஷாயத்தை, சாப்பாட்டுக்கு முன், பெரியவர்கள், 60 மில்லி, குழந்தைகள், 30 மில்லி அளவில், எடுத்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி