பிடித்தம் எவ்வளவு, அகவிலைப்படி பிடித்தம் என்பது எப்படி இருக்கும்? - kalviseithi

Apr 28, 2020

பிடித்தம் எவ்வளவு, அகவிலைப்படி பிடித்தம் என்பது எப்படி இருக்கும்?


அகவிலைப்படி பிடித்தம் என்பது எப்படி இருக்கும் என்று
ஆசிரியர்கள் கூறியதாவது: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி என்பது ஜனவரி 2020 முதல் ஜனவரி 2021 வரை அறிவிக்கப்பட்டது. ஜனவரி 2020ல் இருந்து 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு என்று கணக்கிட்டால் ஒருவர் மாத ஊதியமாக 50 ஆயிரம் பெற்றால்...
ஜனவரி 2020க்கு 4 சதவீதம்    2000
ஜனவரி-ஜூன் வரை 6 மாதம்    
2000X6 = 12000
ஜூலை 2020க்கு கணக்கிட்டால்    
4%+4% = 4000
ஜூலை-டிசம்பர் வரை 6 மாதம்    
4000X6 = 24000
ஜனவரி 2021க்கு கணக்கிட்டால்    4%+4%+4% = 6000
ஜனவரி-ஜூலை வரை 6 மாதம்    
6000X6 = 36000
மொத்தம்    12000+24000+36000 = 72000

எனவே மேற்கண்ட கணக்குப்படி 50 ஆயிரம் ஊதியம் பெறும் ஒருவர் 72 ஆயிரம் இழக்க வேண்டி வருகிறது. இதுதவிர மற்ற தொகைகளில் ஊதியம் பெறுவோர் மேற்கண்ட முறைப்படி கணக்கீடு செய்து கொண்டால் பல கோடி ரூபாய் அரசுக்கு கிடைக்கும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 15 நாள் இஎல் மற்றும் 18 மாத அகவிலைப்படி பிடித்தம் செய்யப்படுவதால் ஒரு அரசு ஊழியருக்கு குறைந்தபட்சம் 50 ஆயிரத்தில் இருந்து அதிகப்பட்சமாக ₹1.50 லட்சம் வருமானம் இழப்பு ஏற்படும். ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ₹3 லட்சம் வரை இழப்பு ஏற்படும்.

இதுகுறித்து நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: மத்திய அரசு அறிவித்துள்ள ஜனவரி 2020 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி, ஜூலை 2020 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி, ஜனவரி 2021க்காக அகவிலைப்படி ஆகியவை தற்போது வழங்கப்பட மாட்டாது. மேலும், 2021 ஜனவரி மற்றும் 2021 ஜூலைக்கான அகவிலைப்படி தலா 4 சதவீதம் என 12 சதவீத தொகை 2021 ஜூலையில் வழங்கப்படும். அப்போது, வழங்கப்படும் அகவிலைப்படியில் நிலுவைத்தொகை ஏதும் வழங்கப்பட மாட்டாது. 

இந்த ஆணை ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியில் இருப்போர், நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றுவோர், உள்ளாட்சி பணியாளர்கள், யுஜிசி, ஏஐசிடிஇ ஆகியவற்றின் ஊதியம் பெறுவோர், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பாலிடெக்னிக் ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், வருவாய்த்துறையில் பணியாற்றும் கிராம உதவியாளர்கள், மதிய உணவு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், குழந்தை நல ஒருங்கிணைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள், பஞ்சாயத்து செயலாளர்கள், எழுத்தர்கள், ஆகியோருக்கு பொருந்தும்.  இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “தமிழத்தில் 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களின் 15 நாள் ஈட்டிய விடுப்பு மற்றும் 18 மாத அகவிலைப்படியை அரசு பிடித்தம் செய்தால், தமிழக அரசுக்கு 5,000 கோடி வரை மிச்சமாகும்” என்றார்.

13 comments:

 1. First government dont have revenue.
  Second all government employees should sacrifice.
  Third you should compare the expenses in march month to april month.
  Fourth inorder to survive food only is essential. Not others like shopping outing.
  Im also a gov school teacher
  Still in many states that did not implemented seventh pay commission
  Average income in bihar is 69000 per annum. But in tamilnadu the average income is above 150000 per annum.
  So please dont consider as loss.
  லாப நஷ்ட கணக்கு பார்த்து வாழ்வது வாழ்க்கையா?
  தயவு செய்து அணைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சமுதாயம் உணருங்கள்.
  மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்துள்ளது
  சரியாக மூன்று மாதங்களுக்கு பிறகு பிற பொருட்களின் விலையும் நிச்சயமாக குறையும்

  ReplyDelete
  Replies
  1. In which school are you working.

   Delete
  2. சூப்பர் சார். பணம் மட்டும் வாழ்கை இல்லை அரசாங்கம் ஏழை மக்களுக்கு நமது பணத்தை பிடித்தம் செய்து .கொரோன நிவாரண உதவி செய்தும்.. ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தி. சுகாதார துறைக்கு அதிக நிதி ஒதுக்கி உள்ளது .. மேலும் தற்போது அரசு வருமானம் குறைவு.. எனவே பெருமிதத்துடன் EL மற்றும் TA வினை அரசுக்கு விட்டு தருவோம்.இன்னைக்கு வேளைக்கு போக முடியாம ரொம்ப பேர் வீட்லையே இருக்காங்க.. அவங்க நிலைமையை புரிஞ்சிக்கினும்.. சுயநலமாய் வாழுறது வாழ்கை இல்லை..

   Delete
 2. Government high school near vellakoil tiruppur district

  ReplyDelete
 3. இது தவறான கணக்கு . ஒருவர் அவர் சம்பளத்தில் basic salary எவ்வளவு சம்பளம் வாங்குகிறாரோ அதற்கு மட்டும் தான் அகவிலைப்படி வழங்கப்படும். மொத்த சம்பளத்துக்கு வழங்கப்படாது.

  ReplyDelete
 4. இதே போன்று அர‌சாங்க‌ம் வெற்று விள‌ம்ப‌ர‌ங்க‌ளுக்கு செய்யும் செல‌வையும்,ச‌ட்ட‌ ம‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளுக்கான‌ ச‌ம்ப‌ள‌த் தொகை குறைப்பு ம‌ற்றும் அவ‌ர்க‌ளுக்கான‌ பென்ச‌னையும் இர‌த்து செய்தால் ப‌ல‌ இல‌ட்ச‌ம் கோடி செல‌வு மிச்ச‌மாகும் செய்வார்க‌ளா?..

  ReplyDelete
 5. இந்த‌ இக்க‌ட்டான‌ நேர‌த்திலும் சேவை செய்யும் சுகாதார‌ம்,காவ‌ல் துறையின‌ரையும் இந்த‌ ந‌ட‌வ‌டிக்கையில் சேர்த்திருப்ப‌து எந்த‌ வ‌கையில் நியாய‌ம்??..

  ReplyDelete
 6. சுகாதாரம் மற்றும் காவல் துறையை சேர்ந்தவர்கள் துரய்மை பணியாளர்களுக்கு விலக்கு அளிக்கவும்.

  ReplyDelete
 7. இந்தியா வேணாம் என்று வெளிநாட்டுக்கு போய் சம்பாதித்து கொரனா நோயோடு வந்தவர்கள் மீண்டும் வெளிநாடு போய் விட சம்பாதிக்க போகிறார்கள்..ஆனால் நமக்கு பொருளாதார இழப்பு என அவர்களை நாட்டுக்குள் விட்டுவிட்டு சாமனியர்களை தவிக்க விடுகிறார்கள்..அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ,ஈட்டிய விடுப்பு ஓராண்டுக்கு இல்லை..கொரனாவுக்கும் அரசு ஊழியர்க்கும் என்ன சம்பந்தம்? எப்படி பொறுப்பாக முடியும்?

  ReplyDelete
 8. ஒரே குடும்பத்தில் பென்சன் வாங்குபவர்களும் பென்சன் வாங்கப் போகிறவர்களும் இருக்கும் என் நாடு என்னை வாழ வைக்கும்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி