ஆன்லைன் கிளாஸில் கல்லா கட்டும் தனியார் பள்ளிகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 17, 2020

ஆன்லைன் கிளாஸில் கல்லா கட்டும் தனியார் பள்ளிகள்!



கொரோனா தொற்று அதிகமான மார்ச் மாதம்தான் 11 மற்றும் 12 - ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியது . 12 - ம் வகுப்புத் தேர்வுகள் முடிந்த நிலையில் , 11 - ம் வகுப்புத் தேர்வில் ஒன்று மட்டும் மீதமிருக்க , நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் , அதுவும் ரத்து செய்யப்பட்டுவிட்டது . பள்ளி மாணவர்கள் எல்லாம் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள் .

ஏற்கனவே , ஆன்லைன் மூலம் பாடம் நடத்தும் பைஜூஸ் , வேதாந்தா , அப்கிரேட் , அக்காடமி போன்ற பல தனியார் நிறுவனங்கள் , இந்த நேரத்தைப் பயன்படுத்தி கல்லா கட்டி வருகின்றன . அதே பாணியில் 10 மற்றும் 11 - ம் வகுப்பு மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பதாகத் தெரிகிறது.

 இதுகுறித்து 10 - ம் வகுப்பு படிக்கும் தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் விசாரித்தபோது ,
 10 - ம் வகுப்பு தேர்வுக்காக நாங்கள் கடுமையாக தயாராகிக் கொண்டிருந்தோம் இந் நிலையில்தான் , கொரோனா தொற்று இந்தியாவில் வேகமாகப் பரவத் தொடங்கியது . பிரதமர் ஊரடங்கை அமல்படுத்தியபோதுகூட தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் என்று காத்திருந்தோம் . ஆனால் , மார்ச் 25 - ம் தேதி முதல் 21 நாள் ஊரடங்கு
அமல்படுத்தப்பட்டதால் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன .

விட்டாச்சு லீவு என்று நாங்களும் புத்தகத்தை வைத்துவிட்டு குடும்பத்தோடு விளையாடிக் கொண்டிருந்தோம் . திடீரென அத்தனை மாணவர்களுக்கும் அவரவர் பள்ளிகளில் இருந்து தகவல் வந்தது . அதில் , 1 முதல் 9 - ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என அறிவித்த தமிழக அரசு , 10 - ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து என அறிவிக்கவில்லை .

அதனால் காலதாமதமாக நடைபெறும் வாய்ப்புள்ளது . எனவே ஆசிரியர்கள் வீட்டிலிருந்தபடியே வீடியோவில் பாடத்தை நடத்தி வாட்ஸ் ஆப்பில் அனுப்புவார்கள் . அதனை நீங்களும் வீட்டிலிருந்தபடியே பார்த்துப் படித்து , சந்தேகங்கள் இருந்தால் வாட்ஸ் ஆப்பிலேயே கேட்டுக்கொள்ளலாம் என்றும் , ' வாட்ஸ் ஆப்பிலேயே மாதிரித்தேர்வும் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது .

இந்த கொரோனாவிலும் நாங்கள் பள்ளிக்குப் போகாமலே பாடம் படிக்கிறோம் . இப்படியெல்லாம் பாடம் நடத்தினால்தான் அடுத்த வருடத்துக்கான ஃபீஸை இப்போதே வசூல் செய்ய முடியும் , இப்படி தனியே நடத்தும் ஆன்லைன் வகுப்புக்கும் ஃபீஸ் வாங்கமுடியும் என நினைக்கின்றனர் " என்றனர்.

5 comments:

  1. Pinathulayum panam parthiduvanuga

    ReplyDelete
  2. ஆன்லைன் கல்வி வகுப்புகள் காலத்தின் கட்டாயம் ........ஒரு கல்வி சேனல் தற்போது உடனடி தேவையாகும் ....DD பொதிகை 10 ம் வகுப்பு பாடம் நடத்துவது அருமை ....இன்னும் சிறப்பாக செயல் பட வேண்டும் .....ENGLISH MEDIUM மாணவர்களையும் கருத்தில் கொண்டு பாடம் நடத்த வேண்டும் ...

    தனியார் கல்வி சேனல் ஒன்று அவசியம் தேவை ...........

    ReplyDelete
  3. Adei loosu payalungala... Kasu yarum kekala private schools online classes ku, eppadiyu pasanga tuition fees katta than poranga, ithala ena problem ungaluku,

    ReplyDelete
  4. Education and Medical should be given by govt only

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி