சேலம் பெரியார் பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்புக்கல்லூரிகளில் பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படு வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெரியார் பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் ஏப்ரல்/மே மாதங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த பருவத் தேர்வுகள் மற்றும் செய்முறைத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப் படுகின்றன. ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பின்னர், பருவத் தேர்வுகள், செய்முறைத் தேர்வுகள் குறித்த அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கரோனா தொற்றில் இருந்து கைகளைத் தூய்மையாக்கும் ஆல்கஹால் சானிடைசர் பெரியார் பல்கலைக் கழகத்தின் வேதியியல் துறையில் தயாரிக்கப்பட்டு பல்கலைக் கழக குடியிருப்புகளில் வசிப்பவர்கள், பல்கலைக் கழகத்தில் அத்தி யாவசியப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி