"எதிர்வரும் கல்வியாண்டு ஆசிரியர் சமூகத்திற்கும் சவால் நிறைந்தாக இருக்கப் போகின்றது" -ஆசிரியர் எழுதிய வலைதளப் பதிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 21, 2020

"எதிர்வரும் கல்வியாண்டு ஆசிரியர் சமூகத்திற்கும் சவால் நிறைந்தாக இருக்கப் போகின்றது" -ஆசிரியர் எழுதிய வலைதளப் பதிவு.

கரோனா தொற்று அச்சத்தால் பள்ளிகள் கால வரையறையற்று மூடப்பட்டிருக்கின்றன. ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வு நடத்தாமலே தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு இன்னமும் தேதி குறிக்கமுடியாத நிலையில் மே மாத இறுதியில் பள்ளிகளைத் திறந்து தேர்வுகளை நடத்தலாமா என்று அரசு சிந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், பள்ளி ஆசிரியர்களோ குழப்பமான மனநிலையில் உள்ளனர். அவர்களின் மனநிலையை அப்பட்டமாக பிரதிபலிக்கும் வகையில், ‘என்ன செய்யப்போறீங்க டீச்சர்?’ என்ற தலைப்பில் ஒரு ஆசிரியர் எழுதிய வலைதளப் பதிவு ஆசிரியர்கள் மத்தியில் இப்போது வைரலாகி வருகிறது.


ஆசிரியர்களின் உள்ளக் குமுறலை அப்படியே பிரதிபலிக்கும் அந்தப் பதிவு... ''எதிர்வரும் கல்வியாண்டு ஆசிரியர் சமூகத்திற்கும் சவால் நிறைந்தாக இருக்கப் போகின்றது. கல்வியாண்டு மட்டும் புதிதாக இருக்கப் போவதில்லை... கற்றுக் கொடுக்கும் கல்வியே புதிதாகத்தான் இருக்கப் போகிறது. காலாண்டுகூட இல்லாத ஆண்டாக மாறலாம். அதுமட்டுமா! நெருக்கமாய் அழைத்து புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்குப் பதில் சொன்ன ஆசிரியர்கள் இனி, குழந்தைகள் நெருங்குவதை அச்சமின்றி அனுமதிப்பார்களா? பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி வந்த ஆசிரியர்களும், மாணவர்களும் இனியும் ஒட்டி உரசிப் பயணப்பட விரும்புவார்களா? குடிதண்ணீருக்கே பாடாய்ப்படும் பள்ளிகளில் பலமுறை கை கழுவத் தண்ணீருக்கு எப்போது யார் உத்தரவாதம் தரப் போகின்றார்கள்? இனி, சக ஆசிரியர்கள், பள்ளிக் குழந்தைகளின் தும்மலும், இருமலும் அவர்களை சந்தேகமாய்ப் பார்க்க வைக்கப்போகிறது. நோய்த் தொற்றுக்கு ஆளானவர் அல்லது அவரது குடும்பத்தினரின் குழந்தைகள் எனத் தெரிந்தால் பள்ளியில் அவர்களுடனான உறவு மற்றவர்களுக்கு எப்படி இருக்கும் என்று தெரியாது. அதேபோல், குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த ஆசிரியர்கள், குழந்தைகளைப் பற்றி பிற ஆசிரியர்கள், குழந்தைகளின் பார்வை எப்படி இருக்கப் போகிறது என்றும் சொல்லமுடியவில்லை.


வகுப்பறைகளில் இனி முகமற்ற முகங்களையே பார்க்கலாம். அவர்கள் அணிந்து வரும் முகக் கவசத்திற்கு, அதன் தரத்திற்கு யார் பொறுப்பு? தனிமனித விலகல் என்பது கிருமியை ஒழிக்கவே தவிர, நவீனத் தீண்டாமையல்ல என்பதை எப்படிப் புரியவைப்பது! இதையெல்லாம் சரிசெய்யாமல், கோடை விடுமுறை முடிந்து எப்போதும் பள்ளிக் கதவுகளைத் திறப்பதைப் போல தற்போது பள்ளியைத் திறந்திட முடியுமா? இதுபற்றி கல்வித்துறையோ, கல்வியாளர்களோ வாய் திறந்தார்களா? இவையெல்லாம் சரி செய்யாமல் இப்படியே ஆசிரியர்களையும் பிள்ளைகளையும் பள்ளிக்கு அனுப்பிவிட முடியுமா? அறிவியல் பூர்வமான வைரஸ் குறித்த வகுப்புகள், உளவியல் சார்ந்த வகுப்புகளில் பங்கேற்க வைத்த பின்புதான் அவர்களைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். அத்துடன், ஆண்டில் சில முறை மட்டும் பெயரளவில் குழந்தைகளை ஆய்வு செய்யும் சுகாதார ஆய்வாளர்கள் இனி பள்ளிகளில் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.


உள்ளூர்ப் பஞ்சாயத்து, நகராட்சிகள், அரசு சாரா நிறுவனங்கள், கல்வி இயக்கங்கள், சங்கங்கள் போன்றவைகள் ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியத்திற்கான நடவடிக்கைகளை இணைந்து செய்திட வேண்டும். இவை எல்லாம் நடக்க அரசு விரைந்து செயல்பட வேண்டும். அது ஒரு பக்கம் இருக்கட்டும். நமது பள்ளியில் நீங்க என்ன செய்யப்போறீங்க டீச்சர்?'' இப்படிச் சுற்றுகிறது அந்த வலைதளப் பதிவு.

15 comments:

  1. ஒவ்வொரு ஆசிரியர் மனதிலும் இங்கு பதிவு செய்ய பட்ட கருத்துக்களோடு இன்னும் ஆயிரம் கேள்விகளும் குழப்பங்களும் வலம் வருகின்றன.

    ReplyDelete
  2. குடுமிபிடி சண்டை போடுறதுங்களும் நாட்டாமைகளும் இதுக்கெல்லாம் அஞ்சாது.. வந்ததும் Start பண்ணுவாளுங்க.

    ReplyDelete
  3. இனியாவது,உடன் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இடையே,பகைமை ஒழிந்து அன்பு மலரட்டும்.
    அனுபவத்தில் உயர்ந்து நிற்கும் ஆசிரியரை ,அவரின் அனுபவ வயதுக்கூட இல்லாத இளையவர்கள் எல்லாம் எனக்குத்தெரியும் என்று மரியாதை இன்றி ஒருமையில் பேசும் அநாகரிகம் இந்த குரோனாக்காலதிலாவது ஒழியட்டும்.அனுபவமிக்க ஆசிரியர்களின் அனுபவத்தை செவிமடுத்து அதன் வழி நடப்பது பெருமையையும், பொறுமையையும் தரும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சார்... விடைத்தாள்களை மாணவர்களிடம் கொடுத்து திருத்தும் ஆசிரியர்கள்

      வகுப்பறையில் மாணவர்களை வாசிக்கச் சொல்லிவிட்டு செல்போனை நோண்டும்/தூங்கும் ஆசிரியர்கள்..

      தான் எழுதவேண்டிய அனைத்து பதிவேடுகளையும் பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தலையில் கட்டிவிட்டு ஓய்வெடுக்கும் ஆசிரியர்கள்...

      தனக்கு பிடிக்காத சக ஆசிரியர்களை ஏதாவது ஒரு பிரச்சினையில் சிக்க வைக்கும் ஆசிரியர்கள்...

      தேர்வுப்பணி /தேர்தல் பணி என அனைத்திற்கும் விலக்கு கேட்கும் ஆசிரியர்கள் ...

      இவர்களை தவிர்த்து மற்ற ஆசிரியர்களுக்கு நிச்சயம் மதிப்பளிக்க வேண்டும்... ஆனால் மேற்கண்ட அறிவிலிகளை மதிக்கவே கூடாது.. ஏறி மிதித்து விட்டு போய்கிட்டே இருக்கனும்...

      Delete
  4. அருமை அழகான பதிவு சார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி யில் PTAதற்காலிக ஆசிரியராக 3 Yrs பணிபுரிந்து வருகிறேன் ஈகோ, பகைமை என்று நடக்கிறது. பள்ளியை விட்டு வெளியேறிவிடலாம் என்று தோன்றுகிறது

    ReplyDelete
    Replies
    1. Mr. Saran, you are called to be a teacher. Do not get back. Kindly but boldly GO FORWARD like a soldier. As I have completed about 30 years in Educational field as a teacher, I have found problems are universal. அஞ்சாமல் பணியைத் தொடருங்கள். ஆசிரியப் பணி ஒரு இறைப் பணி. நாங்கள் எல்லாம் உங்களுடன் இருக்கிறோம். நாம் அனைவரும் சேர்ந்தால்தான் அது இந்தியா. துணிவுடன் அதே இடத்தில் ஆசிரியராகச் செயல்படுங்கள்.
      வெற்றிக்கு வழி என்ன தெரியுமா?
      தொடர்ந்து செல்வதே.
      மனம் திறந்து பேசியதைப் பாராட்டுகிறேன்.
      I strongly hope this is enough.
      Isaac Samraj, Science teacher. . .

      Delete
    2. சரண் சார் மனம் தளர வேண்டாம். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான தனி நடத்தை விதிகள் தொகுக்கப்படவும், கடமை சார்ந்த 10 கட்டளைகள் உருவாக்கப்படவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.. அதற்கென தனிபதிவேடும், ஒவ்வொரு மாதமும் 10 கட்டளை உறுதிமொழியும் ஆசிரியர்களால் எடுக்கப்பட்டு பதிவேட்டில் கையெழுத்திடவும் வகை செய்ய முயற்சி எடுக்கப்படுகிறது.. பொறுத்திருங்கள் களைகளுக்கு பூச்சி மருந்து போல இது போன்றவர்களுக்கு விரைவில் முடிவு வரும்.

      Delete
    3. PTA yeen work panringa. Government exam clear pannittu vera Job ku polameee. Adimai vela yeen seiringa....

      Delete
  5. சக ஆசிரியர்களை கேலி, கிண்டல், தரம் தாழ்த்தி பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கும் மேதாவிகளை SMC யிடம் முறையிட்டு அதிகாரிகளிடம் புகார் செய்யலாம் .. நாம் ஏன் வேலையை விட்டு வெளியே வர வேண்டும் சரண் சார். நான் காவல்துறையில் புகார் செய்து விட்டேன். பிறகுதான் என்னை விட்டு ஒழிந்தார்கள். பிறரையும் நோண்டுவதில்லை. நாம் நம் கடமையை நிம்மதியாக செய்ய பல நேரங்களில் புகார் ஒன்றுதான் தீர்வு.

    ReplyDelete
    Replies
    1. ஒரு பள்ளியில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு ஆசிரியரை பிடித்துவிட்டால், அந்த ஆசிரியருக்கு வெளியில் இருந்தெல்லாம் பிரச்சினை வராது.. கூட இருக்குற மேதாவிகளால தான் பிரச்சினை வரும்.. எல்லா இடத்திலும் அப்படிதான்... அந்த நாய்களால் பள்ளிக்கும் நமக்கும் ஒரு பிரயோஜனமும் இருக்காது... கண்டுக்காம விட்டுடுங்க.. அதுவே குரைச்சு குரைச்சு தானா அடங்கிடும்.. பிள்ளைகளுக்காக பள்ளியை முன்னேற்றும் வழியை தேடுங்கள்....

      Delete
  6. யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் நலமே! கண்ணியத்தை காப்பது கற்றவர் கடமை! இங்கு தூய்மை சாலிகளுக்கோ புத்திசாலிகளுக்கோ வேலை இல்லை. சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுபவரே நிலைக்க முடியும்

    ReplyDelete
    Replies
    1. It's correct but teaching is my life whatever maybe I will never neglect my work

      Delete
  7. Respected and dignified friends,
    Lets all make an indelible mark in our daily teaching and learning activities amidst our student community. With negative comments, we shall rectify our errors personally and with positive comments we encourage our group and tend towards the goal, that is, the uplifting of our students. . They are our children and they are our hope for tomorrow.
    Lets always hope the BEST. . .

    ReplyDelete
    Replies
    1. Error correction:
      Kindly read as >>> Respected and dignified friends,
      Thankyou. . .

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி