ஆசிரியர்களுக்கு புதிய பணி - மாவட்ட ஆட்சியர் செயல்முறைகள்! - kalviseithi

Apr 24, 2020

ஆசிரியர்களுக்கு புதிய பணி - மாவட்ட ஆட்சியர் செயல்முறைகள்!அத்தியாவசியத் தேவைகளுக்காக காய்கறி கடைகள் / மளிகை கடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தினசரி காலை 6 . 00 மணி முதல் மதியம் 1 . 00 மணி முடிய திறந்திருக்க அரசு அனுமதித்துள்ளது . நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் நடமாட்டத்தினை கட்டுப்படுத்த ஏதுவாக பொதுமக்களுக்கு மூன்று வகை வண்ண அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன . அதனடிப்படையில் பொதுமக்கள் அவரவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாட்களில் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்காக வீட்டிலிருந்து வெளி வருகின்றனர் . கொரோனா நோய் பரவுதல் தடுப்பு நடவடிக்கைகளில் பொது மக்கள் வீட்டிலேயே இருத்தல் என்பது முக்கிய நடவடிக்கையாகும் .

எனவே , இப்பணியினை உறுதி செய்யவும் , பொது மக்களின் நடமாட்டத்தினை கட்டுப்படுத்தவும் ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு , காவல் துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது . இந்நிலையில் காவல் துறையினருக்கும் , கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள பிற அலுவலர்களுக்கும் உதவும் வகையில் நாமக்கல் நகராட்சி பகுதியில் இணைப்பில் கண்டுள்ள ஆசிரியர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபட உத்திரவிடப்படுகிறது .

இத்துடன் இணைப்பில் கண்டுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர்கள் 25 . 04 . 2020 காலை 6 . 00 மணிக்கு நாமக்கல் காவல் துறை துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் ஆஜராக வேண்டும் . தினசரி காலை 6 . 00 மணி முதல் மதியம் 1 . 00 மணி வரை கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் .

நாமக்கல் காவல் துறை துணைக் கண்காணிப்பாளரால் ஒதுக்கப்படும் தெருக்களில் ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்து , உரிய பாதுகாப்புடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் .

9 comments:

 1. Appadiya therukkalil edukka vendum. Aasiriya thozhil punithamanathu. Ippadiya ponal manavargal samuthayam kettu seerayium.

  ReplyDelete
 2. விருப்பம் உள்ளவர்கள் தாண் இந்த வேளையில் ஈடுபடுகின்றனர்... சிறுமை பெருமை ஒன்றும் இல்லை.. செய்யும் வேலையில்..

  ReplyDelete
 3. அறம் சார்ந்த பணி....வரவேற்கிறோம்..

  ReplyDelete
 4. Yes. Very good. Sirumai permai ondrum illai seiyum velaiyil. Semma work. Super cotinue!

  ReplyDelete
 5. அருமை வாங்க ஆசிரியர்களே ..களத்தில் இணைந்து பணியாட்று வோம்..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி