அரசு ஊழியர்களின் ஒருநாள் சம்பளம் ஒவ்வொரு மாதமும் ஒரு வருடம் பிடித்த செய்யும் அறிவிப்பு - ஊழியர்கள் கலக்கம்! - kalviseithi

Apr 18, 2020

அரசு ஊழியர்களின் ஒருநாள் சம்பளம் ஒவ்வொரு மாதமும் ஒரு வருடம் பிடித்த செய்யும் அறிவிப்பு - ஊழியர்கள் கலக்கம்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மே-3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் மோடி  உத்தவிட்டார். இதற்கிடையே, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு நிவாரணம் வழங்க பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளதுடன், தனி நிதியம் ஒன்றையும் அமைத்துள்ளார். PM Cares Fund என்கிற அந்த நிதியத்தின் பெயரில் நிதி  பெறுவதற்கான வங்கிக் கணக்கும் துவங்கப்பட்டுள்ளது. இதற்கு நிதியளிப்பவர்களுக்கு வருமான விலக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என  பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை செய்து வருகின்றனர். அதுதவிர, அரசு அலுவலர்கள் தங்களது ஒரு மாத ஊதியம், ஒரு நாள் ஊதியத்தை வழங்கி தங்களது பங்களிப்பை செய்து வருகின்றனர். எம்.எல்.ஏ.க்கள்,  எம்.பி.க்களும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதி, ஊதியம் உள்ளிட்டவற்றை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கி வருகின்றனர்.

இருப்பினும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக மத்திய அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம் ஒவ்வொரு மாதமும் வருகிற 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஒரு வருடத்திற்கு பிடித்தம் செய்யப்படும் என மத்திய வருவாய் துறை நேற்று  அறிவித்தது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் வருகிற 20-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் எனவும் மத்திய வருவாய் துறை அறிவுறுத்தியது. இந்நிலையில், மாதந்தோறும் ஒரு நாள் சம்பளம் பிடிக்கும் மத்திய அரசின்  திட்டத்துக்கு ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு ஒருதரப்பு ஊழியர்கள் சம்பளம் பிடிக்கும் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த திட்டம் நிறைவேறுமா? இல்லையா?  என்பது 20-ம் தேதிக்கு பின்தான் தெரியரும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி