சிவில் சர்வீசஸ்தேர்வு தள்ளிவைக்கப்படுமா? யு.பி.எஸ்.சி. விளக்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 16, 2020

சிவில் சர்வீசஸ்தேர்வு தள்ளிவைக்கப்படுமா? யு.பி.எஸ்.சி. விளக்கம்!


மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா நோய்த்தொற்று இருக்கும் நிலைமை குறித்தும், தேர்வு குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்ய மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கூட்டம் நேற்று நடந்தது. அதில் சிலவற்றை குறித்து ஆலோசிக்கப்பட்டது.2019 சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான ஆளுமைத் தேர்வுகள் பற்றி, மே மாதம் 3-ந்தேதி ஊரடங்கு முடிந்த பிறகு முடிவு எடுக்கப்படும். 2020 சிவில் சர்வீஸ் தேர்வு (முதல்நிலை), என்ஜினீயரிங் சேவைகள் (முதன்மை), புவியியலாளர் சேவைகள் (முதன்மை) தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

இனிவரும் சூழலை பொறுத்து, தேவைப்பட்டால் இந்தத் தேர்வுகள் தள்ளிவைக்கப்படும்பட்சத்தில், அதுபற்றிய அறிவிப்பு தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.கொரோனா தடுப்பு பணிக்காக மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஏப்ரல்முதல் ஓராண்டுக்கு தங்களின் அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதத்தையும், தேர்வாணையத்தின் இதர அலுவலர்கள் ஒரு நாள் ஊதியத்தையும் விட்டுக்கொடுத்து இருக்கின்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி