பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் வாழ்த்துப்பண் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 30, 2020

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் வாழ்த்துப்பண்


சித்திரையில் முத்திரையாய் கவித்துவத்தில் அகில்மணமாய் தமிழுக்குத் தம் வாழ்வுதனில் செம்மையைச் செழுங்கிளையாய்ச் சேர்ப்பித்த புரட்சிக்கவி புதுவையின் இரத்தினமே!

ஓரில்லத் திருமணத்தில் கண்ணுற்றாய் பாரதியை அந்நாள் முதலே தம் இருமனங்களும் ஒன்றிட வழிவகுத்தாய்! 

மகாகவியின் 'இந்தியா' இதழைப் பதிப்பித்து உதவி விடுதலைப் போரிலும் பங்கேற்றாய்! 

தேசியக்கட்சியின் உறுதுணையாய் இருந்த பொழுதோ ஐயிரண்டாண்டுகள் உள்ளமது கொள்ளையுண்டதோ நின் ஆருயிர் வரை!

'பாரதி' இன்னுயிர் நீங்கிய திங்களிலே நின்னுயிர் அரும்புதல்வி உலகறிய அவதரித்தாள்!

தெவிட்டாத தெள்ளுதமிழைத் தென்றலெனக் குயிலோசையாகச் சிந்தை முழுதும் பரப்பிட்டு மேற்றிசையில் பகலவனைப் போல,

மறைந்தும் தம் கவிப்புலத்தால் அணையா ஒளிர்கின்றாய்!

'தமிழியக்கம்' எனும் பனுவலை ஓர்  இராப் பொழுதில் எழுத்தாணி கொண்டு எழவைத்தாய்!

நாட்டினிலே குடும்பக்கட்டுப்பாடு முறையைத் தம் கவித்துவத்தில் தருவித்த முதல் பாவலன் நீயே!

வள்ளுவம் எழுதிய பொதுமறைக்கு உரைநவின்று_ நங்கையர் உள்ளம் சிறப்புற குடும்ப விளக்கேற்றி நலிவடைந்த அம்மாண்பு இருண்டவீடென உரைத்திட்ட கவியுலகப் புரட்சியே!

நினதருமை அறிந்த தமிழகம் மெரினாவிலே வடித்தது நின் உருவச்சிலை!


நீ புனைந்த பிசிராந்தையாருக்கு இலக்கிய உயர்விருது உலக மாநாட்டிலே! 


ஆயிரத்தில் தொள்ளாயிரத்து தொண்ணூற்றில் நாட்டுடைமையானது நின் கவிப்புதையல்!

'தமிழ் எங்கள் உயிரென'ப் பரவசப்படுத்திய பாவலனே நீயே எங்கள் 'உயிர்' பல்லாண்டுகள் பெருகியும் அருகா நின்(ற) கவித்துவம் புரட்சி!

(பாவேந்தர் பிறந்த நாளில் பிறந்தது)

கவிஆக்கம்:
கு.சரவணன், 
முதுகலை தமிழாசிரியர்,
கதிரிமில்ஸ் மேநிப,
கோவை: 16.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி