Flash News : ஏப்ரல் 20 முதல் எவற்றுக்கெல்லாம் அனுமதி ? - மத்திய அரசு விளக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 15, 2020

Flash News : ஏப்ரல் 20 முதல் எவற்றுக்கெல்லாம் அனுமதி ? - மத்திய அரசு விளக்கம்.

நேற்று காலை நாட்டு மக்களிடையே உரையாற்றிய பாரத பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கு உத்தரவானது மேலும் மே 3 வரை நீட்டிக்கும் என அறிவித்தார். மேலும் ஏப்ரல் 20க்கு பிறகு கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதியில் சில தளர்வுகள் அளிக்கப்படும் என கூறியிருந்தார்.

அதன்படி, ஏப்ரல் 20 முதல் எவற்றுக்கெல்லாம் அனுமதி அளிக்கப்படும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

*பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைனில் பாடம் நடத்தலாம்

* கூரியர்,  ஆன்லைன் வணிகம் நிறுவனங்கள் இயங்க அனுமதி.

* ஐ.டி நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் இயங்கலாம்.

*ஏப்ரல் 20 ம் தேதி முதல்;100 வேலை நாள் திட்டத்துக்கு அனுமதி- மத்திய அரசு

*விவசாயம், தோட்டக்கலை, விவசாய மண்டிகள், பன்னைத்தொழிலுக்கு அனுமதி

*தச்சர், பிளம்பர், எலக்ட்ரீசியன்,மெக்கானிக் போன்றோர் வேலை செய்யலாம்.

*நகரத்துக்கு வெளியே இருக்கும் சிறு, குறு தொழிற்சாலைகள் இயங்க அனுமதி- மத்திய அரசு

*சமூக இடைவெளி விட்டு பணிகளை மேற்கொள்ளலாம்

*மாவட்ட, மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து, ரயில் சேவைகளுக்கு  மே 3 ம் தேதி வரை தடை தொடரும்.

* லாரி பட்டறைகள் , விவசாய இயந்திர பட்டறை, நெடுஞ்சாலை தாபா, உர விற்பனை கடைகள், மீன்பிடித்தல் மற்றும் விற்பனைக்கு அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு

*பொது இடத்திலும், வேலை செய்யும் இடத்திலும் முககவசம் அனிவது கட்டாயம்

*பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம்.

*கல்வி நிலையங்கள், பயிற்சி நிலையங்கள், வழிபாட்டு தளங்கள், திரையரங்குகள், மால் போன்றவை இயங்க தடை தொடரும்- மத்திய அரசு

*டாக்சி, ஆட்டோ இயங்க அனுமதியில்லை

*கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் இந்த தளர்வுகள் பொருந்தாது என மத்திய அரசு அறிவிப்பு

*மாநில தலைமைச் செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவை செயலர் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்

*இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி