Kalviseithi Science Fact - கால்நடைகள் குடையைக் கண்டவுடன் மிரள்வது ஏன்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 25, 2020

Kalviseithi Science Fact - கால்நடைகள் குடையைக் கண்டவுடன் மிரள்வது ஏன்?


விலங்குகளின் நிறப் பார்வையைக் கண்டறிய பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. பாலூட்டிகளில் மனிதன், மனிதக் குரங்குகள் , குரங்குகளைத் தவிர எந்த விலங்கிற்கும் நிறப் பார்வை இல்லை !

தேனீக்களுக்குச் சிவப்பு வண்ணத்தைத் தவிர மற்ற வண்ணங்களைக் கண்டறியும் திறன் உள்ளன. அவற்றுக்கு சிவப்பு வண்ணம் , பழுப்பு நிறமாக - கறுப்பு நிறமாகத் தெரிகின்றதாம்.

ஆனால் , தேனீக்கள் புற ஊதாக் கதிர்களைக் கண்டறியும் திறன் பெற்றுள்ளன! ( இப்பண்பு மனிதருக்கு இல்லை ). பறவைகளுக்கு , நிறப் பார்வை அதிகத் திறன் வாய்ந்ததாக இருக்கிறது. பெண் பறவைகளைக் காட்டிலும் ஆண் பறவைகள் கண்ணைக் கவரும் பல வண்ணங்களைப் பெற்றுள்ளன.

இந்த வண்ணங்கள் தம் இனப் பெண் பறவைகளை , இனச் சேர்க்கைக்குக் கவர்ந்திழுக்க உதவுகிறது. பொதுவாக , விலங்குகளுக்கு நிறப் பார்வையைவிட மோப்ப சக்தி அதிகமாக உள்ளது.

இதற்குக் காரணம் , அந்த விலங்குகள் இரவில் வேட்டையாடும் முன்னோர்களிடமிருந்து வந்ததுதான் என்று கருதுகிறார்கள்.

கால்நடைகளுக்கு நிறப் பார்வை இல்லை! குடையைக் கண்டு மிரள்வது அதன் அசைவைப் பொறுத்துத்தான் என்று கூறலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி