Science Fact - காற்றாடி ( பட்டம் ) உயரப் பறக்கிறது. அதே வேளையில் , துண்டுக் காகிதம் பறப்பதில்லையே ! கீழே விழுவதேன் ? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 18, 2020

Science Fact - காற்றாடி ( பட்டம் ) உயரப் பறக்கிறது. அதே வேளையில் , துண்டுக் காகிதம் பறப்பதில்லையே ! கீழே விழுவதேன் ?


பல குச்சிகளைச் சேர்த்துக்கட்டி சதுரம் போன்று வடிவமைத்து , அதன்மீது காகிதத்தை ஒட்டி , ஒரு பரப்பைத் தயாரிக்கிறோம். இதன் ஒரு மூலையில் வாலை இணைக்கிறோம். இதுவே காற்றாடி எனப்படுகிறது. இந்தப் பரப்பின்மீது சீராக காற்று வீசும்போது , ஒரு தள்ளுவிசை உண்டாகிறது.

இந்த விசையினால் காற்றாடி , காற்று வீசும் திசையில் பறந்து மேலே உயர்கிறது? காற்றாடியின் நடுவில் கட்டியுள்ள நூலை லாவகமாக சுண்டி காற்றாடியை மேலே உயர்த்தவும் கீழே இறக்கவும் முடிகிறது. காற்றாடியின் வால் , காற்றாடி நிலையாக பறக்க உதவுகிறது.

வால் இல்லையென்றால் , காற்றாடி நிலைகுலைந்து , அலைந்து முடிவில் கீழே விழுந்துவிடும். காற்று சீராக வீசாமல் புயல்போல சுழன்று வீசினாலும் காற்றாடி பறக்க இயலாது. கெட்டியான குச்சிகளால் அமைக்கப்பட்ட வடிவமோ , வாலோ இல்லாத ஒரு துண்டுக் காகிதம் காற்றில் அலையும். அதன் பரப்பானது விரிந்து காற்றுக்கு எதிராக நிலைக்க முடியாது. அதனால் காகித துண்டின் பரப்புமீது சீரான தள்ளுவிசை உண்டாகாது. மேலும் தள்ளுவிசையின் திசைக்கோணம் தொடர்ந்து மாறுவதால் துண்டுக் காகிதம் தொடர்ந்து அலைந்து முடிவில் கீழே விழுந்துவிடும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி