பள்ளிக் கல்வி - 01.01.2018 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றவர்கள் / உரிமை விடல் செய்தவர்கள் விபரம் கோரி (பணிவரன்முறை செய்யும் பொருட்டு) பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - நாள்: 19.05.2020. - kalviseithi

May 22, 2020

பள்ளிக் கல்வி - 01.01.2018 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றவர்கள் / உரிமை விடல் செய்தவர்கள் விபரம் கோரி (பணிவரன்முறை செய்யும் பொருட்டு) பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - நாள்: 19.05.2020.


01.01.2018 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு / பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய 02.08.2018 மற்றும் 04.08.2018 ஆகிய இரு நாட்களில் நடைபெற்ற இணையதள வழி கலந்தாய்வு மூலம் கலந்து கொண்டு பதவி உயர்வு , பணிமாறுதல் பெற்றவர் பணியில் சேர்ந்த விவரம் கோரப்பட்டமைக்கு 110 நபர்கள் சார்ந்த விவரங்கள் வரப்பெறாததால் , 110 நபர்களின் பட்டியல் இணைத்து அவர்கள் சார்ந்த விவரங்கள் 28.02.2020 க்குள் அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டது.

மேற்கண்ட 110 நபர்கள் பட்டியல் இணைத்து விவரங்கள் கோரப்பட்டதைத் தொடர்ந்து 05.03.2020 நாளிட்ட செயல்முறைகளில் நினைவூட்டு அனுப்பிய நிலையிலும் நாளது வரை 50 நபர்கள் விவரம் வரப்பெறாததால் அனைத்து ஆசிரியர்களுக்கும் பணிவரன்முறை செய்து ஆணை வழங்கிட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதை மீண்டும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களின் நேரடி கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

 எனவே , 17.02.2020 நாளிட்ட செயல்முறைகளுடன் அனுப்பப்பட்டுள்ள 110 நபர்களின் பட்டியலினை சரிபார்த்து அதில் கீழ்க்கண்ட வரிசை எண்ணில் உள்ள 50 நபர்களின் விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து ஆதார நகல்களுடன் 05.06.2020 க்குள் அனுப்பி வைக்குமாறும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

4 comments:


 1. TET பாஸ் பண்ணியவர்களை எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி படி நியமனம் செய்ய திமுக ஆட்சியில் தான் நடக்கும்.ஆகையால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை
  TET+EMPLOYEEMENT SENIORITY இருந்தால் என்றாவது ஒரு நாள் அரசு வேலைக்கு செல்லலாம்
  இதை வலியுறுத்தி தேர்தல் அறிக்கையில் அறிவிக்க வேண்டும் அரசியல் கட்சிகள். வெற்றி பெறு

  ReplyDelete
  Replies
  1. 2013 ku already posting pottachi. Summaaa 2013 2013 nu sollathinga Tamilan. 17 19 la pass pannavanga thaan athiga paathikka patttavanga.

   Delete
  2. Mr unknown sgt vacant 800 அதான் pottanga....2013க்கு முதலில் vaippu....

   Delete
 2. I am first finished maths bed again
  Completed ba history nan paper 2 social science eluthalama?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி